டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#combo1 நாம் பார்த்திருப்போம் டீக்கடை உடன் சேர்ந்து இருக்கும் ஹோட்டலில்
கண்ணாடிப் பெட்டிக்குள் பூரி செய்து வைத்திருப்பார்கள் அது இரவு ஆனாலும் அப்படியே உப்பலாக இருக்கும். மேலும் க்ரிஸ்பியாவும் நன்கு பொன்னிறமாகவும் இருக்கும். அந்த ரெசிபி தான் இங்கு நான் கொடுத்திருக்கிறேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கப் வறுக்காத பச்சை ரவை
  2. 1\2கப் மைதா
  3. தேவையானஅளவு உப்பு
  4. தேவையானஅளவு தண்ணீர்
  5. தேவையான அளவு பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ரவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக, மாவாக பொடித்து எடுத்துக்கொள்ளவும். கொர கொரப்பு தன்மையே இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். (மிக்ஸி ஜாரில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்)

  2. 2

    இப்போது இதனை ஒரு மிக்ஸிங் பவுலில் சேர்த்து அதனுடன் மைதா மாவு சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்

  3. 3

    சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவை நன்கு கலந்து விடவும்

  4. 4

    இப்போது மாவை பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து விட்டு அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் தடவி, தட்டு கொண்டு மூடி இரண்டு மணி நேரங்கள் நன்கு ஊற விடவும்.(இரண்டு மணி நேரங்கள் பிறகே பூரி தயாரிக்கவும்)

  5. 5

    இப்போது சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து சிறிது எண்ணெய் தடவி பூரியாக தேய்க்கவும்

  6. 6

    கடாயில் தாராளமாக எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், ஒவ்வொன்றாக போட்டு, திருப்பி விட்டு, பொன்னிறமாக வந்ததும் நன்கு பொரித்து எண்ணெயை வடித்து எடுக்கவும். இதற்கு டீக்கடை ஹோட்டலில் செய்யும் செய்முறையின்படிஉருளைக்கிழங்கு மசாலாவுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes