மல்டிவிட்டமின் லட்டு (ஆளி விதை/எள்ளு/வேர்க்கடலை /நட்ஸ் லட்டு)

சமையல் குறிப்புகள்
- 1
ஆளிவிதை 1பங்கு எனில் கருப்பு அல்லது வெள்ளை எள் 1/2பங்கு மற்றும் வேர்க்கடலை 1/4பங்கு எடுத்துக் கொள்ளவும்.
- 2
மேலும் கருப்பட்டி அல்லது வெல்லம் அவரவர் இனிப்பு சுவை தேவைக்கு ஏற்ப எடுத்து கொள்ளவும். மிதமான தீயில் முதலில் ஆழிவிதையை வறுத்துக் கொள்ளவும். எள்ளை போன்று ஆளியும் வெடிக்கும் அதுவரை வறுத்து கொள்ளவும். ஆனால் அதே நேரம் அதிக நேரம் வறுத்தால் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் எனவே 5நிமிடம் வரை மட்டுமே வறுத்து ஆற விட்டு பின் மிக்சியில் அரைத்து கொள்ளவும். மிக்சியிலும் அதிக நேரம் அரைக்க கூடாது. விட்டு விட்டு 3முறை ஓட்டினால் போதும்.
- 3
அதே முறையில் எள்ளயும் வறுத்து அரைத்து கொள்ளவும். பின்னர் வேர்க்கடலையை நன்றாக வறுத்து ஆறவிட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
பின்னர் அரைத்த ஆளி பவுடர், எள்ளு பவுடர், வேர்க்கடலை பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் நட்ஸ் பவுடர் இருந்தால் 3டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். இல்லை எனில் பாதாம், பிஸ்தா, முந்திரி, வாழ்நாட் எது உள்ளதோ அதை மிதமான தீயில் வறுத்து கொரகொரப்பாக அரைத்து கலந்து கொள்ளவும்.
- 5
பாதாமை மட்டும் முதலில் நீரில் ஊற வைத்து தோலை நீக்கி பின்னர் வறுத்து கொள்ளவும். பின்னர் கருப்பட்டி அல்லது வெல்லதோடு 1/4டம்ளர் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விட்டு பின்னர் வடிக்கட்டி கொள்ளவும். பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து 1கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
- 6
பின்னர் அரைத்த மாவை சேர்த்து நன்கு கிளறவும். மேலும் அதில் 2சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். பின்னர் நன்கு ஆற விட்டு லட்டு போல் உருட்டி எடுக்கவும்.
- 7
குறிப்பு :கருப்பட்டி பயன் படுத்தினால் பாகு பதம் வராது அதற்கு பதில் நன்கு திக்காக காய்ச்சி பயன் படுத்தவும். மாவில் வெல்லப் பாகு பயன் படுத்தினால் மிதமான சூட்டில் உருண்டை பிடிக்கவும். ஆறி விட்டால் கெட்டி ஆகி விடும். கருப்பட்டி பயன் படுத்தினால் நன்கு ஆற விட்டு உருண்டை பிடிக்கவும். இது உடலுக்கு வலிமை சேர்க்கும் தான் எனினும் ஒரு நாளைக்கு 1லட்டு மட்டுமே சாப்பிட வேண்டும். இதில் பயன் படுத்தும் அனைத்து பொருளிலும் எண்ணெய் தன்மை உள்ளதால் லட்டு பிடிக்கும் போது நெய்யோ எண்ணெயோ தேவை இல்லை. சுவை மிகுந்த ரெட.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

வேர்க்கடலை எள்ளு உருண்டை (Groundnut,sesame balls recipe in tamil)


எள்ளு வேர்க்கடலை உருண்டை (Ellu verkadalai urundai recipe in tamil)


வேர்க்கடலை லட்டு (peanut laddu recipe in tamil)


எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)


ஆலிவ் விதை லேகியம்(flax seeds lekiyam recipe in tamil)


கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)


நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)


ராகி, ஆளி விதை லட்டு


நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)


தேங்காய்பால் ஜிகர்தண்டா(coconut milk jigarthanda recipe in tamil)


ராகி லட்டு


கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)


அமராந் விதை பர்பி (Amaranth vithai burfi recipe in tamil)


சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)


எள்ளு சீடை


வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)


சக்கரைவள்ளி தேங்காய் லட்டு (Sarkaraivalli thenkaai laddo recipe in tamil)


நட்ஸ் லட்டு(Nuts laddu)


உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)


நட்ஸ் கேரமல் பர்பி


எள்ளு லட்டு


பச்சை பயிறு லட்டு (Green Gram Ladoo recipe In Tamil)


ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)


ஆரோக்கியமான ப்ரோடீன் லட்டு


ஹெல்த்தி ஸ்மூத்தி (Healthy smoothy Recipe in Tamil)


நட்ஸ் பால் (Nuts ball Recipe in Tamil)


(தாமரை விதை பாயசம்) Ultimate Taste 😋(Lotus seeds kheer recipe in tamil)


வேர்க்கடலை எள்ளு உருண்டை (Verkadalai ellu urundai recipe in tamil)


தேங்காய் வெல்லம் லட்டு || COCONUT JAGGERY LADDU (Thenkaai vellam laddo recipe in tamil)

கமெண்ட்