சுவையான சத்தான நான்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

எளிதில் செய்யக்கூடிய நான் . பட்டர் மசாலாவுடன் சாபிட்டால் தேவாமிருதம் #combo3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 ¾ கப் ஆல் பர்ப்பஸ் என் ரிச்ட் மாவு (all purpose enriched wheat flour)
  2. 1 தேக்கரண்டி பொடித்த சக்கரை
  3. ½ தேக்கரண்டி உப்பு
  4. 1தேக்கரண்டி பேகிங் சோடா
  5. 2 மேஜை கரண்டி எண்ணை
  6. ½ கப் தயிர்
  7. ¼ கப் பால்
  8. ஒரு நான் மேல் சேர்க்க:
  9. 1 மேஜை கரண்டி பூண்டு நசுக்கியது
  10. ½ மேஜை கரண்டி கொத்தாமல்லி, பொடியாக நறுக்கியது
  11. ½ மேஜை கரண்டி கருஞ் சீரகம்
  12. 1 மேஜை கரண்டி வெண்ணை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.

  2. 2

    கிண்ணத்தில் மாவு,பொடித்த சக்கரை, உப்பு, பேகிங் சோடா போட்டு விஸ்க் செய்து கலந்து கொள்ளுங்கள். நடுவில் சின்ன குழி செய்து, எண்ணை தயிர் சேர்த்து கையால் ஒன்றாக சேருங்கள். பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையுங்கள். சப்பாத்தி மாவூ செய்வது போல நீட் (knead) செய்க. மாவு சாவ்டாக (soft) வழ வழ வென்று இருக்க வேண்டும். விரலால் அழுத்தினால். அழுத்தின இடம் மேலே உடனே வரவேண்டும். இரண்டு கைகள் நடுவில் மாவை வைத்து மடித்து மடித்து நீட் செய்து (படம்) மாவை பந்து போல உருட்டி, மேலே எண்ணை தடவி கிண்ணத்தை மூடி வைக்க

  3. 3

    கிண்ணத்தை துணியாலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட் போட்டு முடிவைக்க -3-4 மணி நேரம். மாவு இரண்டு மடங்காக உப்பும் வரை.மாவை எடுத்து நான் செய்ய நீட் செய்து சின்ன உருண்டை செய்க. 5 உருண்டைகள் செயல்லாம். உருண்டையை இரண்டு கைகள் நடுவில் மாவை வைத்து மடித்து மடித்து நீட் செய்து (படம்) மாவை பந்து போல உருட்டி, சப்பாத்தி கல் மேல் வைத்து உங்களுக்கு பிடித்த வடிவில் நான் செய்க. நானை விரல்களால் பிடித்து இழத்துக் கொள்ளலாம்.

  4. 4

    டாப்பிங் (topping): சின்ன துருவியால் பூண்டை துருவி மேலே போடுக. கொத்தமல்லி மல்லி, சீரகம் தூவுக. குழவியை அதன் மேல் உருட்டுக தூவிய பொருட்கள் ஒட்டிக்கொள்ளும்.(படம்) நான் சுட தயார். மிதமான நெருப்பின் மேல் ஸ்கிலெட்டை. (skillet) வைக்க. மேலே தண்ணிர் தெளித்தால் ஆவி வரவேண்டும். வெண்ணை தடவி நானை போடுக. நெருப்பை சிறிது குறைக்க. மேல் பக்கம் குமிழ்கள் வரும். இப்பொழுது 2 விதமாக மேல் பக்கத்தை சுடலாம். 1)மேலே வெண்ணை தடவி திருப்பி வேக வைக்கலாம் 2) நேரே தீயின் மேல் சுட்டுக்கொள்ளலாம் புல்கா சப்பாத்தி செய்வது போல.

  5. 5

    .பிரவுன் ஆகும். வெண்ணை தடவுக.
    நான் தயார். பரிமாறும் தட்டின் மேல் போடுக. பட்டர் மசாலா சேர்த்து பரிமாறுக. நல்ல காம்போ, நல்ல சத்து, சுவை டிப்ஸ்: அதிகமாக சோடா சேர்க்காதீர்க்கள், அதிகமானால் சுடும் போது நான் உடைந்துவிடும். Crumble ஆகும். பாலும், தயிரும் சாஃப்ட் நான் செய்ய அவசியம் மாவை கட்டாயம் ரெஸ்ட் செய்ய வேண்டும். தீயில் நேரே சுடும் பொது கை ஜாக்கிரத்தை; Cooking tongs உபயோகிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes