மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 ¾ கப் ஆல் பர்ப்பஸ் என் ரிச்ட் மாவு (all purpose enriched wheat flour)
  2. 1 தேக்கரண்டி பொடித்த சக்கரை
  3. ½ தேக்கரண்டி உப்பு
  4. 2 மேஜை கரண்டி எண்ணை
  5. ½ கப் தயிர்
  6. ¼ கப் பால்
  7. 1பீட்ஸா கிரஸ்ட் (crust) மேல் சேர்க்க:
  8. 1 மேஜை கரண்டி பூண்டு நசுக்கியது
  9. ½ மேஜை கரண்டி கொத்தாமல்லி, பொடியாக நறுக்கியது
  10. ½ மேஜை கரண்டி கருஞ் சீரகம்
  11. 1 மேஜை கரண்டி வெண்ணை
  12. ஒரு பீட்ஸா டாப்பிங் (topping)
  13. ½ கப் ஷ்ரேட்டேட் சீஸ் (shredded cheese)
  14. 1 மேஜை கரண்டி பச்சை காப்சிகம், பொடியாக நறுக்கியது
  15. 1 மேஜை கரண்டி சிகப்பு காப்சிகம், பொடியாக நறுக்கியது
  16. 1 மேஜை கரண்டி மஞ்சள் காப்சிகம், பொடியாக நறுக்கியது
  17. 1 தேக்கரண்டி பீட்ஸா ஸ்பைஸ் மிக்ஸ் (பேசில் ஆரிகேனோ (oregano))

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    கிண்ணத்தில் மாவு (all purpose enriched wheat flour),பொடித்த சக்கரை, உப்பு, பேகிங் சோடா போட்டு விஸ்க் செய்து கலந்து கொள்ளுங்கள். நடுவில் சின்ன குழி செய்து, எண்ணை
    தயிர் சேர்த்து கையால் ஒன்றாக சேருங்கள். பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையுங்கள். சப்பாத்தி மாவூ செய்வது போல நீட் (knead) செய்க. மாவு சாவ்டாக (soft) வழ வழ வென்று இருக்க வேண்டும். விரலால் அழுத்தினால். அழுத்தின இடம் மேலே உடனே வரவேண்டும். இரண்டு கைகள் நடுவில் மாவை வைத்து மடித்து மடித்து நீட் செய்க (படம்)

  3. 3

    மாவை பந்து போல உருட்டி, கிண்ணத்தை துணியாலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட் போட்டு முடிவைக்க -3-4 மணி நேரம். மாவு இரண்டு மடங்காக உப்பும் வரை. மாவை எடுத்து கிரஸ்ட் செய்ய: நீட் செய்து சின்ன உருண்டை செய்க. 6 உருண்டைகள் செயல்லாம். உருண்டையை இரண்டு கைகள் நடுவில் மாவை வைத்து மடித்து மடித்து நீட் செய்து மாவை பந்து போல உருட்டி, சப்பாத்தி கல் மேல் வைத்து உங்களுக்கு பிடித்த வடிவில் கிரஸ்ட் செய்க. விரல்களால் பிடித்து இழத்துக் கொள்ளலாம். கிரஸ்ட் டாப்பிங் (topping): சின்ன துருவியால் பூண்டை துருவி மேலே போடுக.

  4. 4

    கொத்தமல்லி மல்லி, சீரகம் தூவுக. குழவியை அதன் மேல் உருட்டுக தூவிய பொருட்கள் ஒட்டிக்கொள்ளும்.(படம்) கிரஸ்ட் சுட தயார். மிதமான நெருப்பின் மேல் ஸ்கிலெட்டை. (skillet) வைக்க. மேலே தண்ணிர் தெளித்தால் ஆவி வரவேண்டும். வெண்ணை தடவி போடுக. நெருப்பை சிறிது குறைக்க. மேல் பக்கம் குமிழ்கள் வரும். மேல் பக்கத்தின் மேலே வெண்ணை தடவி திருப்பி வேக வைக்க.
    பிரவுன் ஆகும். கிரஸ்ட் தயார்.

  5. 5

    ஒரு பீட்ஸா டாப்பிங் (topping)
    பீட்ஸா கிரஸ்ட் மேல ஷ்ரேட்டேட் சீஸ் பரப்பி அதன் மேல்
    பச்சை, சிகப்பு, மஞ்சள் காப்சிகம் போட்டு மைக்ரோவேவ் செய்க-2-3 நிமிடங்கள். சீஸ் உருகும், வெளியே எடுத்து பீட்ஸா ஸ்பைஸ் மிக்ஸ் தூவுங்கள். மிளகு பொடி, மிளகாய் பொடி கூட துவலாம்.

    சுவையான பீட்ஸா ருசித்து பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes