மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake)

Deiva Jegan
Deiva Jegan @deiva12345

#vattaramSalem Dharmapuri மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி உண்ண கூடிய விதத்தில் அருமையான கேக் இப்டி செய்ங்க.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1மாம்பழம் -
  2. 1/2கப்வெள்ளம் -
  3. 200கோதுமை மாவு -
  4. 200gmநாட்டு சக்கரை-
  5. -1gmபேக்கிங் பவுடர்
  6. 1/2gmபேக்கிங் soda-
  7. 1முட்டை-
  8. 1gmவெண்ணிலா எசன்ஸ் -
  9. 50gmசமையல் எண்ணெய்-
  10. 2 ஸ்பூன்பால் -
  11. 4 ஸ்பூன்மாம்பழ பியூரி -

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு மாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனை சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சி ஜாரில் அரைத்து கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து அதில் பியூரி சேர்த்து அதனுடன் சம அளவு வெல்லம் சேர்த்து நன்கு கரண்டி வைத்து 5 நிமிடம் கிண்டவும். மாம்பழம் நன்கு வெல்லத்துடன் சேர்ந்து வெந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.

  3. 3

    ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சேர்த்து நன்கு அடித்து கலக்கி நுரை பொங்கி வரும் போது மஞ்சள் கருவையும் சேர்க்கவும்.அதனையும் நன்கு கலக்கி பின் சமையல் எண்ணெய் சேர்க்கவும்.அதனுடன் கோதுமை மாவு மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கலாம்.பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்க்கவும்.கடைசியாக மாம்பழ பியூரி சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    குக்கரில் அடியில் உப்பு போட்டு ஸ்டான்ட் போட்டு காஸ்கட், விசில் எதுவும் போடாமல் 15 நிமிடம் பிரஹீட் செய்யவும்.

  5. 5

    பிறகு கலக்கி வைத்துள்ள மாவை கேக்கின் பாத்திரத்தில் எண்ணெய் கிரீஸ் செய்து அடியில் பட்டர் பேப்பர் போட்டு அதுனுள் ஊற்றவும்.

  6. 6

    நன்கு டேப் செய்த பிறகு அதனை குக்கரில் வைத்து 45 இல் இருந்து 50 நிமிடம் வரை எடுத்துக்கொள்ளும்.அதன் பிறகு சூடு ஆறியதும், கத்தியால் சுற்றிக் எடுக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deiva Jegan
Deiva Jegan @deiva12345
அன்று

Similar Recipes