தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 2 கப் மைதா
  2. 1 கப் சர்க்கரை
  3. 60 கிராம் கஸ்டர்ட் பவுடர்
  4. 30 கிராம் பால் பவுடர்
  5. 3/4 கப் வனஸ்பதி
  6. 3/4 கப் நெய்
  7. 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  9. 1 சிட்டிகை உப்பு
  10. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  11. 1 ஸ்பூன் வெனிசுவேலா எசென்ஸ்
  12. 50 கிராம் நட்ஸ் பொடித்தது (பாதாம் முந்திரி வால்நட்)

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    மைதா பால் பவுடர் கஸ்டர்ட் பவுடர் பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து இரண்டு முறை ஜலித்து எடுக்கவும் பின் அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பின் கரகரப்பாக பொடித்த நட்ஸ் ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் வெனிசுவேலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் வனஸ்பதி உடன் நெய் கலந்து சூடாக்கி சிறிது சிறிதாக ஊற்றவும்

  3. 3

    பின் விரல் நுனியால் நன்கு கலந்து விடவும் இந்த மாதிரி ப்ரட் க்ரம்ஸ் போல் வரும் பின் மீதமுள்ள நெய் வனஸ்பதி கலவையை ஊற்றி இந்த பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும் இதை ஒரு அரை மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து பின் எடுத்து மீண்டும் நன்கு பிசைந்து நான்கு பாகங்களாக பிரித்து கொள்ளவும்

    பின் அதை சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்

    பின் பிஸ்கட் கட்டரை பயன்படுத்தி கட் செய்து கொள்ளவும்

  4. 4

    இவ்வாறு அனைத்து மாவிலும் ஹார்ட் ஷேப் மற்றும் இலை பூ வடிவம் செய்து கொள்ளவும் இதை நெய் தடவிய தட்டில் அடுக்கி வைக்கவும்

  5. 5

    பின் ஒரு அகலமான பாத்திரத்தில் மணலை பரப்பி அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் வரை சூடாக்கவும் பின் அதனுள் பிஸ்கட் தட்டை வைத்து அந்த பாத்திரத்தை மூடி அதன் மேல் ஒரு கணமான கல்லை வைத்து மெல்லிய தீயில் 30 _35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

    ஓவன் என்றால் 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் சூடாக்கி பின் அதில் ட்ரேயை வைத்து 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 15_20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான வெனிலா கஸ்டர்ட் பிஸ்கட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes