உருண்டை குழம்பு

Sharmila Senthilkumar
Sharmila Senthilkumar @TasteBetter
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1/2 cupகடலைப்பருப்பு , துவரம் பருப்பு – 1/4 cup
  2. 4காய்ந்த மிளகாய் ,சோம்பு – 1/2tsp
  3. 1/2tspசீரகம் , பெரிய வெங்காயம் – 1
  4. 1/4 cupதுருவிய தேங்காய், சீரகம் – 1/2 tsp முந்திரிப் பருப்பு-5
  5. சிறிதளவு கருவேப்பிலை ,சின்ன வெங்காயம் – 50 g உப்பு - for taste
  6. 3 tbspநல்லெண்ணெய் வெந்தயம் – 1/8 tsp கடுகு – 1/2tsp
  7. சிறிதளவுகருவேப்பிலை , சின்ன வெங்காயம் – 150 g பூண்டு – 50 g
  8. 1தக்காளி , சாம்பார் தூள் – 2 tsp மஞ்சள் தூள் – 1/2 tsp
  9. சிறிய புளி எலுமிச்சை பழ அளவு கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பு உருண்டை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கப் கடலைப்பருப்பு, கால் கப் துவரம்பருப்பு மற்றும் 4 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அதனுடன் அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி சீரகம், கருவேப்பிலை சிறிதளவு, ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.இட்லி தட்டில் எண்ணெய் தடவி உருண்டைகளை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.அதனுடன்150 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயம் மற்றும் 50 கிராம் அளவு பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும்
    பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதனுடன் ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.தயாராக வைத்துள்ள பருப்பு உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.

  5. 5

    ஒரு மிக்ஸி ஜாரில் கால் கப் துருவிய தேங்காய், அரை தேக்கரண்டி சீரகம், மற்றும் நான்கு அல்லது ஐந்து முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.குழம்பு கொதித்த பின் அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

  6. 6

    சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sharmila Senthilkumar
அன்று

Similar Recipes