எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 40 நிமிடம
4 பரிமாறுவது
  1. 2கப் மைதா மாவு
  2. 10 பல் பூண்டு
  3. 1/4கப் வெண்ணெய்
  4. 1 1/2ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  5. சிறிதளவுகொத்தமல்லி
  6. 1/2ஸ்பூன் உப்பு
  7. 1மேசைக்கரண்டி சர்க்கரை
  8. 1ஸ்பூன் ட்ரை ஈஸ்ட்
  9. 1/4கப் வெதுவெதுப்பான தண்ணீர்
  10. தேவையான அளவுஓரிகனோ
  11. 2டேபிள்ஸ்பூன் பால்
  12. 1ஸ்பூன் வெள்ளை எள்

சமையல் குறிப்புகள்

1 மணி 40 நிமிடம
  1. 1

    ஒரு பவுலில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டு ஈஸ்ட் சேர்த்து கலந்து அப்படியே 10 நிமிடம் மூடி வைக்கவும்.

  2. 2

    ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி வந்ததும் மற்றொரு பவுலில் மைதா மாவு, உப்பு சேர்த்து கலந்து விட்டு இதில் ஆக்டிவேட் ஆன ஈஸ்ட் சேர்த்து 2ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கைகளால் அழுத்தம் கொடுத்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    நன்கு பிசைந்து வைத்த பின் அதன் மேல் லேசாக வெண்ணெய் தடவி விட்டு மூடி போட்டு 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

  4. 4

    ஒரு பவுலில் பூண்டை தோல் உரித்து நசுக்கி சேர்த்து வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    இதில் ஓரிகனோ,சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

  6. 6

    பிறகு மாவு இரண்டு பங்காக உப்பி வந்த பின்னர் கைகளால் நன்கு அழுத்தம் கொடுத்து சாஃப்ட் ஆக பிசைந்து கொள்ளவும்.

  7. 7

    பிறகு இதனை தேய்க்கும் கட்டைக்கு மாற்றி நான்கு பங்காக பிரித்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  8. 8

    பிறகு ஒரு உருண்டையை எடுத்து நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து மைதா மாவு லேசாக தூவி வட்டமாக தேய்த்து அதன் மேல் இந்த கார்லிக் சில்லி ப்ளேக்ஸ் கலவையை சிறிதளவு எடுத்து தடவி பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் மீது மாற்றி வைத்து கொள்ளவும்.

  9. 9

    இதே போல் இரண்டு உருண்டைகளை வட்டமாக தேய்த்து அதன் மேல் கார்லிக் கலவையை தடவி ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து கொள்ளவும்.கடைசி உருண்டையை வட்டமாக தேய்த்து மூடி கொள்ளவும்.பின்னர் படத்தில் காட்டியபடி நடுவில் வட்டமாக மூடி வைத்து லேசாக அச்சு வைத்து எடுத்து கொள்ளவும்.

  10. 10

    பிறகு கத்தியால் இது போல் 8 பாகமாக கட் செய்து கொள்ளவும். படத்தில் காட்டியபடி ஒரு பங்கின் சற்று மேல் பகுதியில் இருந்து நடுவில் கட் செய்து கொள்ளவும்.

  11. 11

    கட் செய்த இந்த துண்டுகளை இரண்டு கைகளில் பிடித்து ஜடை பின்னல் போல் மாற்றி மாற்றி கடைசி பகுதியில் சேர்த்து கீழ் பக்கமாக அழுத்தி விடவும்.இதே போல் எல்லாவற்றையும் செய்து கொள்ளவும்.

  12. 12

    இதனை லேசாக 15 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும்.லேசாக பெரிதாக வரும்.

  13. 13

    பிறகு ப்ரஷ் ஐ பாலில் முக்கி இதன் மேல் தடவி விடவும்.இதன் மேல் சில்லி ப்ளேக்ஸ், ஓரிகனோ, வெள்ளை எள் சிறிதளவு தூவி விடவும்.

  14. 14

    ஓவனை 170டிகிரி ப்ரீஹூட் செய்து வைத்த பின் இந்த ட்ரேயை ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுத்து கொள்ளவும்.

  15. 15

    பேக் ஆன பிறகு வெளியே எடுத்து சூடு தணிந்த பிறகு கட் செய்து பரிமாறவும்.

  16. 16

    சூப்பரான கார்லிக் சுவையில் ப்ளவர் ஷேப்பில் சில்லி கார்லிக் பிரெட் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes