தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 150 கிராம் சேனைக்கிழங்கு
  2. 2 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  5. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 6 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  9. 1 ஸ்பூன் கடுகு
  10. 1 ஸ்பூன் சீரகம்
  11. 1 வரமிளகாய்
  12. சிறிதுகறிவேப்பிலை
  13. சிறிதுகொத்தமல்லி தழை
  14. மசாலா அரைக்க:
  15. 1/2 கப் தேங்காய் துருவல்
  16. 1 ஸ்பூன் சோம்பு
  17. 1 ஸ்பூன் சீரகம்
  18. 1 ஸ்பூன் கசகசா
  19. 2பட்டை
  20. 6 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சேனைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்

  2. 2

    பின் மண் போக நன்கு கழுவி கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிழங்கை போட்டு வேகவிடவும் 90 சதவீதம் வெந்ததும் இறக்கி தண்ணீரை வடிகட்டி வைக்கவும்

  3. 3

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் வரமிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் கறிவேப்பிலை சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்
    பின் குழம்புமிளகாய்த்தூள் தனியாத்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்

  7. 7

    அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்

  8. 8

    பின் வேகவைத்த கிழங்கை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் நன்கு திக்காக கிழங்குடன் மசாலா சேர்ந்து வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  9. 9

    சுவையான ஆரோக்கியமான சேனைக்கிழங்கு மசாலா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes