மட்டர் பன்னீர் கிரேவி / Butter panner curry receip in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

மட்டர் பன்னீர் கிரேவி / Butter panner curry receip in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
3 பரிமாறுவது
  1. 150 கிராம் பன்னீர்
  2. 1 கப் பச்சை பட்டாணி
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 3 தக்காளி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  9. 1/2டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  10. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. தேவையான அளவு உப்பு
  12. தாளிப்பதற்கு
  13. 1 துண்டு பட்டை
  14. 1பிரியாணி இலை
  15. 1 நட்சத்திர சோம்பு
  16. 1கல்பாசி பூ
  17. 1/4 டீஸ்பூன் சோம்பு
  18. ஒரு கொத்து கருவேப்பிலை
  19. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் பன்னீரில் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து

  2. 2

    ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மசாலா தடவிய பன்னீரை சேர்த்து 2 நிமிடங்கள் பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 3 தக்காளியை நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி

  4. 4

    பட்டை கிராம்பு சோம்பு பிரியாணி இலை கல்பாசி பூ சேர்த்து தாளிக்கவும் பிறகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  5. 5

    வெங்காயம் வதங்க சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு

  6. 6

    அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

  7. 7

    அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து நன்றாக கலந்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும் மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு

  8. 8

    கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை பட்டாணியை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்

  9. 9

    கிரேவி நன்றாக கொதித்த பிறகு பொரித்து வைத்த பன்னீரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்

  10. 10

    சுவையான மட்டர் பன்னீர் கிரேவி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes