உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 minutes
4 பரிமாறுவது
  1. ஒன்றுபெரிய வெங்காயம்
  2. 2தக்காளி
  3. 2பச்சை மிளகாய்
  4. அரை ஸ்பூன்மிளகாய் தூள்
  5. ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  6. அரைப்பதற்கு
  7. ஒன்றுபெரிய வெங்காயம்
  8. சிறிதளவுஇஞ்சி
  9. பத்து பல்பூண்டு
  10. சிறிதுபட்டை
  11. 3கிராம்பு-
  12. அரை ஸ்பூன்சீரகம்
  13. அரை ஸ்பூன்சோம்பு
  14. ஒன்றுநட்சத்திர பூ
  15. 1பிரியாணி இலை சிறியது
  16. 4 ஸ்பூன்தேங்காய்
  17. 4முந்திரி
  18. 2பச்சைமிளகாய்
  19. ஒன்றுஏலக்காய்
  20. 4முட்டை

சமையல் குறிப்புகள்

25 minutes
  1. 1

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்காமல் பச்சையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கியவுடன் அதனுடன் மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும் பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் அளவிற்கு கொதிக்க விடவும்

  5. 5

    பின்பு முட்டையை கரண்டியில் உடைத்து ஊற்றி அதனை மெதுவாக குழம்பில் உடையாமல் சேர்க்கவும். (கரண்டியில் ஊற்றிய பின்பு குழம்பில் ஊற்றவும் ஒரு சில சமயம் முட்டை கெட்டுப் போய் இருக்கவும் வாய்ப்பு உண்டு.)

  6. 6

    கரண்டியால் கிளறாமல் மூடி போட்டு 5 முதல் 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்

  7. 7

    சிறிது நேரம் கழித்து முட்டை உடைத்து ஊற்றிய இடத்தில் கரண்டியால் கிளறி அடுப்பை அனைத்து விடவும். உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes