எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்
  1. 3/4 கிலோ நண்டு
  2. 25 சின்ன வெங்காயம்
  3. 1/2 கப் நல்லெண்ணெய்
  4. 1பட்டை, 2 கிராம்பு
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  7. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/4 ஸ்பூன் மல்லித் தூள்
  9. 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. தேவையானஅளவு உப்பு
  11. தேவையானஅளவு தண்ணீர்
  12. 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  13. 1பெரிய ஸ்பூன் மிளகு தூள்
  14. அரைப்பதற்கு
  15. 1/4 கப்கொத்தமல்லி இலை
  16. 1/4 கப் புதினா இலை
  17. 1 பச்சை மிளகாய்
  18. 2 தக்காளி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வட சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும். சூடானதும் பட்டை கிராம்பு நீளமாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

  3. 3

    இரவு சுத்தம் செய்து வைத்துள்ள நண்டு சேர்த்து உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து பிரட்டி விடவும்..

  4. 4

    இதில் கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் 15 நிமிடம் வேக விடவும்.

  5. 5

    நண்டு வெந்த பின் இறுதியில் மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கறிவேப்பிலை தூவி அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    சுவையான நண்டு மசாலா வின்டர் மற்றும் கிறிஸ்மஸ் சீசனுக்கு ஏற்றதாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes