தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)

Syeda Begam
Syeda Begam @SyedaBegam

தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1.5 கப் அரிசி
  2. 4 பெரிய தக்காளி
  3. 1.5 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1/4 கப் எண்ணெய்
  6. 1பிரியாணி இலை
  7. 1 ஜாதிபத்திரி
  8. 2 கல்பாசி
  9. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  10. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 1/2 தேக்கரண்டி மல்லி தூள்
  12. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  13. தேவையானஅளவு உப்பு
  14. 3 கப் தண்ணீர்
  15. 10புதினா இலை
  16. சிறிதுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை ஜாதிபத்திரி கல்பாசி சேர்த்து தாளிக்கவும் அதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  2. 2

    பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மல்லித் தூள் இவற்றை சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் புதினா இலைகளை சேர்த்து அதுவும். தக்காளி வதக்கும் போது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

  3. 3

    தக்காளி மசிந்து குலைந்து வெந்தபின் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    குக்கர் சூடு தணிந்த பின் சுவையான தக்காளி பிரியாணி பரிமாற தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Syeda Begam
Syeda Begam @SyedaBegam
அன்று

Similar Recipes