*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 2 கப்முடக்கத்தான் கீரை
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1பெரிய தக்காளி
  4. 1 கப்து.பருப்பு
  5. 6 பல்பூண்டு
  6. 3ப.மிளகாய்
  7. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  8. 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  9. 1 டீ ஸ்பூன்கடுகு
  10. 1 டீ ஸ்பூன்வெந்தயம்
  11. 3சி.மிளகாய்
  12. ருசிக்குகல் உப்பு
  13. 1 ஸ்பூன்விளக்கெண்ணெய்
  14. 1 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய்
  15. 1 நெல்லிக்காய் அளவுபுளி
  16. சிறு கட்டிவெல்லம்
  17. தேவைக்குதண்ணீர்
  18. 1 டீ ஸ்பூன்சர்க்கரை
  19. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  20. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  21. 1 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், தக்காளியையும், நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    து.பருப்பை, சுத்தம் செய்து தேவையான தண்ணீர் விட்டு, குக்கரில் போட்டு, தக்காளி, பூண்டு, உப்பு, ம.தூள் சேர்த்து, 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் விடவும்.

  3. 3

    பின் குக்கரை மூடி 3 விசில் வைத்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், மிளகாய் தாளிக்கவும்.

  5. 5

    தாளித்ததும்,வெங்காயம், உப்பு போட்டு வதக்கியதும், ம.தூள், சாம்பார் பொடி போடவும்.

  6. 6

    புளியை ஊற வைத்து, கரைத்து, நன்கு வடி கட்டிக் கொள்ளவும்.பின், கீரை, சர்க்கரை போட்டு வதக்கவும்.

  7. 7

    அடுப்பை மீடியத்தில் வைத்து, புளிக் கரைசலை ஊற்றவும்.புளி வாசனை போனதும், வெந்த பருப்பு கலவையை நன்கு மசித்து போடவும்.

  8. 8

    கொதித்து கெட்டியானதும், வெல்லக் கட்டியை போடவும்.ஒன்று சேரக் கோதித்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலையை போடவும்.

  9. 9

    கடைசியாக பெருங்காயத் தூள் போட்டு கிளறி இறக்கவும்.

  10. 10

    பிறகு, பௌலில் எடுக்கவும்.இப்போது, சத்தான,* முடக்கத்தான் கீரை சாம்பார்*தயார்.கீரையின் பச்சை நிறம் மாறாதிருக்க, சர்க்கரையும், கீரையின் கசப்புத் தன்மைக்கு, வெல்லமும், சேர்க்கவும்.இட்லி,தோசை,சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes