சௌசௌ மோர்க்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)

சௌசௌ மோர்க்குழம்பு(chow chow mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சௌசௌ ஐ சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 2
பின் நறுக்கிய சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய சௌசௌ சேர்க்கவும்
- 3
பின் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்
- 4
நன்றாக கலந்து ஒரு தட்டு வைத்து மூடி வேகவிடவும்
- 5
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் துவரம்பருப்பு கடலைப்பருப்பு பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்
- 6
ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து அரைக்கவும் மோர்குழம்பில் சீரக மணம் தனி சுவையை கொடுக்கும்
- 7
பின் ஊறவைத்த பருப்பை சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும் நைசாக அரைக்க வேண்டாம்
- 8
பின் சௌசௌ நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து மிக்ஸி ஜாரை கழுவி தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ளவும்
- 9
பின் 5_7 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து பச்சை வாசனை போக கிளறவும் பருப்பு சேர்த்திருப்பதால் அடி பிடிக்கும் அதனால் தொடர்ந்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும் தயிரை கட்டியில்லாமல் நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 10
மசாலா விழுது பச்சை வாசனை போக வதங்கியதும் கடைந்த மோர் ஊற்றவும்
- 11
நன்றாக கலந்து விடவும் மெல்லிய தீயில் வைத்து நன்றாக கலந்து விடவும்
- 12
பின் கொதிக்க விட கூடாது ஓரங்களில் நுரைத்து பொங்கி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 13
பின் தாளிக்க எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வரமிளகாய் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து அந்த சூட்டிலே பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொட்டி ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளவும்
- 14
நல்லெண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தாளித்தால் மிகவும் நன்றாக இருக்கும் சௌசௌ பதிலாக முள்ளங்கி நூல்கோல் வெண்பூசணி காயை பயன்படுத்தி செய்யலாம்
- 15
சுவையான ஆரோக்கியமான சௌசௌ மோர்க்குழம்பு ரெடி
Top Search in
Similar Recipes
-
மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
-
சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)
இது புது சுவையாக இருக்கும். வெங்காயம், வரமிளகாய்4,பச்சை மிளகாய்2மல்லி பொடி ஒரு ஸ்பூன்,உப்பு ஒருஸ்பூன். சௌசௌ தோல்நீக்கி பொடியாக நறுக்கியது.வெங்காயம் பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய் வதக்கவும். உப்பு சீரகம் சோம்பு போடவும் ஒSubbulakshmi -
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
-
-
-
-
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
-
More Recipes
கமெண்ட்