வாழைப்பூ கோலா(vaalaipoo kola urundai recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

வாழைப்பூ கோலா(vaalaipoo kola urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 வாழைப்பூ
  2. 1 பச்சை மிளகாய்
  3. 3ஸ்பூன் பொட்டு கடலை
  4. தேவையானஅளவு உப்பு
  5. 1/4மூடி தேங்காய்
  6. 1/2துண்டு இஞ்சி
  7. 1ஸ்பூன் சோம்பு
  8. 1/2ஸ்பூன் சீரகம்
  9. 1/2ஸ்பூன் மிளகு
  10. 2 பட்டை
  11. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  12. 1 வெங்காயம்
  13. சிறிதளவுகறிவேப்பிலை
  14. சிறிதளவுகொத்தமல்லி
  15. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    வாழைப்பூவை சுத்தம் செய்து தனி தனியே எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு, சீரகம், பட்டை, மிளகு, பொட்டு கடலை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

  3. 3

    அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வாழைப்பூ சேர்த்து தண்ணீர் இல்லாமல் வற்றி வரும் வரை வதக்கி சூடு தணிந்த பின்னர் மிக்ஸியில் பல்ஸ் செய்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு ஒரு பவுலில் அரைத்த தேங்காய் பேஸ்ட், வெங்காயம், கறிவேப்பிலை சிறிதாக நறுக்கியது, வாழைப்பூ அரைத்தது சேர்த்து, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  5. 5

    சிறிதளவு கையில் எடுத்து உருண்டை உருட்டி
    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

  6. 6

    சூப்பரான சுவையான வாழைப்பூ கோலா தயார். நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes