உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம்.

உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)

#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
3பேர்
  1. 1/4கப் பச்சை பட்டாணி
  2. 2உருளை கிழங்கு
  3. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 1பெரிய வெங்காயம்
  5. 1சிறிய தக்காளி
  6. 2மிளகாய்
  7. அரைக்க:
  8. 1/3கப்( தேங்காய் துருவல்
  9. 2மிளகாய்
  10. 1ஸ்பூன் பெருஞ்சீரகம்
  11. 1ஸ்பூன் கசகசா
  12. 10முந்திரி)
  13. தேவையானஅளவு உப்பு
  14. 2பின்ச் கரம் மசாலா
  15. தாளிக்க:
  16. 2ஸ்பூன் கடலை எண்ணெய்
  17. 1துண்டு பட்டை
  18. 2கிராம்பு

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பட்டாணியை 8மணி நேரம் ஊற விடவும்.
    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில்,1டம்ளர் தண்ணீர் ஊற்றி கிழங்கை நறுக்கி சேர்த்து,அதனுள் வேறு பாத்திரத்தில்,ஊற வைத்த பட்டணியுடன் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக வைக்கவும்.

  3. 3

    அடுப்பில் வாணலியை வைத்து,எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து,நறுக்கிய வெங்காயம்,மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.பின்,தக்காளிசேர்த்து வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் அரைத்த விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து,தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  6. 6

    கொதித்ததும்,வேக வைத்த உருளை கிழங்கு மற்றும் பட்டாணி சேர்த்து கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும்.

  7. 7

    நன்றாக கொதித்ததும், கொஞ்சமாக கிழங்கை மசித்து விடவும்.

    சப்பாத்திக்கு கிரேவி பதத்திலும்,சாம்பார், காரகுழம்புடன் சேர்த்து சாப்பிட,கூட்டு பதத்தில் வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான உருளை கிழங்கு பால் கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes

More Recipes