*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#DG
மாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம்.

*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)

#DG
மாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
8பேர்
  1. 1கப்பெரியதாக நறுக்கின மாங்காய் துண்டுகள்
  2. 1/2 கப்நறுக்கின, பெ.வெங்காயம்
  3. 1/4 கப்தக்காளி நறுக்கினது
  4. 1 டீ ஸ்பூன்வெந்தயம்
  5. 1 டீ ஸ்பூன்கடுகு
  6. 1 டீ ஸ்பூன்து.பருப்பு
  7. 2சி.மிளகாய்
  8. 2நறுக்கின ப.மிளகாய்
  9. வறுத்து அரைக்க:-
  10. 2 டேபிள் ஸ்பூன்தனியா
  11. 12சி.மிளகாய்
  12. 2 ஸ்பூன்க.பருப்பு
  13. 2 ஸ்பூன்உ.பருப்பு
  14. 2 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  15. 1கப்கெட்டியாக கரைத்து வடிகட்டிய புளிக் கரைசல்
  16. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  17. 2 ஸ்பூன்சாம்பார் பொடி
  18. 1ஸ்பூன்வறுத்து அரைத்த பொடி
  19. ருசிக்குகல் உப்பு
  20. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  21. 1 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி இலை
  22. சிறு கட்டிவெல்லம்
  23. 1/4 கப்ந.எண்ணெய்
  24. தேவைக்குதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.மாங்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    புளியை ஊறவைத்து, நன்கு கரைத்து வடிகட்டவும்.

  3. 3

    வெறும் கடாயில், தனியா, க.பருப்பு, உ.பருப்பு, மிளகாயை வறுத்து,சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பை மீடியத்தில் வைத்து,கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும்,கடுகு, வெந்தயம், து.பருப்பு,ப.மிளகாய்,சி.மிளகாய் தாளிக்கவும்.

  5. 5

    தாளித்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கினதும், தக்காளியை போடவும்.

  6. 6

    அடுத்து மாங்காயை போட்டு வதக்கவும்.

  7. 7

    அடுப்பை சிம்மில் வைத்து, புளிக்கரைசலை ஊற்றி, கொதிக்க விடவும்.

  8. 8

    கொதித்து புளி வாசனை போனதும், சாம்பார் பொடி, உப்பு போடவும்.

  9. 9

    சிறிது கொதித்ததும், அரைத்த பொடியை போடவும்.

  10. 10

    பிறகு வெல்லம் போட்டு, கொதித்து,கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விடவும்.

  11. 11

    மேலே,பெருங்காயத் தூள், கொத்தமல்லி தழை,காய்ச்சாத ந.எண்ணெய் விட்டு இறக்கவும்.

  12. 12

    இறக்கினதும், குழம்பை பௌலுக்கு மாற்றவும்.

  13. 13

    இப்போது, சுவையான,* மாங்காய், வறுத்து அரைத்த பொடி குழம்பு*தயார்.இந்த குழம்பின் ஹைலைட்டே,இதில் போடும் வறுத்த பொடி தான்.சுடு சாதத்தில் நெய்(அ) ந.எண்ணெய் விட்டு, சுட்ட அப்பளத்துடன், சாப்பிட, அருமையாக இருக்கும்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes