உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#qk
இரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம்.

உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)

#qk
இரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2-3பேர்
  1. 3கப் வடித்த சாதம்
  2. 3உருளைக்கிழங்கு
  3. 1பெரிய வெங்காயம்
  4. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1பிரியாணி இலை
  6. 2கிராம்பு
  7. 1துண்டு பட்டை
  8. 2ஏலக்காய்
  9. 1/2ஸ்பூன் சீரகம்
  10. 1/2ஸ்பூன் சோம்பு
  11. 1ஸ்பூன் கரம் மசாலா
  12. 1டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 3ஸ்பூன் எண்ணெய்
  15. 1/2ஸ்பூன் கடுகு
  16. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    உருளைக்கிழங்கை, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்,கடுகு,சீரகம்,பிரியாணி இலை,பட்டை,கிராம்பு, ஏலக்காய் சோம்பு,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    பின்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும்.பின் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்க்கவும்.

  5. 5

    கிழங்கை அடிக்கடி கிளறி விட்டு (அடி பிடிப்பது போல் இருந்தால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்) மூடி போட்டு பத்து நிமிடங்கள் வேக விடவும்.

  6. 6

    வெந்ததும்,மஞ்சள் தூள் கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு மூடி போட்டு கிளறவும்.

  7. 7

    மசாலா,பச்சை வாசம் போய் கிழங்கில் ஒட்டிப் பிடித்ததும் வேகவைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.

  8. 8

    அவ்வளவுதான். சுவையான
    உருளைக்கிழங்கு சாதம் ரெடி.

    இதனுடன்,தயிர் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes