ஹைதராபாத் பிரியாணி(hydrebad biryani recipe in tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#BR

ஹைதராபாத் பிரியாணி(hydrebad biryani recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3/4கிலோ - சிக்கன் எலும்புடன்
  2. 2- வெங்காயம்
  3. 1/4கப் - எண்ணெய்
  4. 2டேபிள்ஸ்பூன் -நெய்
  5. 1/4கப் - மல்லித்தழை
  6. 1/4கப் -புதினா
  7. 1டீஸ்பூன் -குங்குமப்பூ
  8. 1/2கப் - பால்
  9. சாதத்திற்கு தேவையானவை :
  10. 3கப் - பாஸ்மதி அரிசி
  11. 1- பிரியாணி இலை
  12. 2- கிராம்பு
  13. 1-மராட்டி மொக்கு
  14. 1-அனாசிப்பூ
  15. சிக்கன் ஊற வைப்பதற்கு தேவையானவை :
  16. 5- பச்சை மிளகாய்
  17. 2டேபிள் ஸ்பூன் - இஞ்சி, பூண்டு விழுது
  18. 1/2கப் - தயிர்
  19. 2டீஸ்பூன் -மிளகாய்த்தூள்
  20. 1/4டீஸ்பூன் -மஞ்சள்தூள்
  21. 1டீஸ்பூன் -மல்லி தூள்
  22. தேவையானஅளவு- உப்பு
  23. 2டீஸ்பூன் -எலுமிச்சம்பழச்சாறு
  24. அரைக்க தேவையானவை :
  25. 1/4கப் - மல்லித்தழை
  26. 1துண்டு - பட்டை
  27. 1/ 2 கப் -புதினா
  28. 10-மிளகு
  29. 3-ஏலக்காய்
  30. 3-கிராம்பு
  31. 1/2கப் -மைதாமாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அரிசியைக் களைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    சிக்கனை கழுவி வைத்து கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் புதினா, மல்லித்தழை நீங்கலாக மீதமுள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இறுதியாக புதினா, மல்லித்தழை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து, கலக்கி ஊற வைக்கவும். இதன் மேல் சிறிது வறுத்து வைத்துள்ள வெங்காயம் சிறிது சேர்க்கவும்

  3. 3

    அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நான்கு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இதனுடன் நெய், எண்ணெய், பிரியாணி இலை,மராட்டி மொக்கு அனாசிப்பூ, பட்டை,கிராம்பு சேர்க்கவும்.

  4. 4

    தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அதிக சூட்டில் 6 முதல் 7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும் உடனடியாக சாதத்தை வடித்து தனியே வைக்கவும்.குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து வைத்திருக்கவும்.

  5. 5

    மசாலாவில் ஊறிய சிக்கனை,கடாயை சூடாக்கி 5 - 6 நிமிடங்கள் வைத்து இறக்கவும்.

  6. 6

    .ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடு செய்து, அதில் நெய், எண்ணெய் சேர்த்து, முதலில் வேக வைத்துள்ள சாத்த்தில் பாதியை பரவலாக வைக்கவும்

  7. 7

    பின் சிக்கனையும் சேர்க்கவும்.பின் பொரித்து வைத்துள்ள வெங்காயம் சிறிது பரவலாக தூவவும்.

  8. 8

    பின் மீதம் உள்ள சாதத்தை கொட்டி பரப்பி விடவும். மீதம் வைத்துள்ள வெங்காயம், மல்லி, புதினா இலை(பொடியாக நறுக்கியது) சேர்க்கவும்.இறுதியாக குங்கம்பூ கலவையை ஊற்றவும்.

  9. 9

    பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு, மைதாமாவை (சப்பாத்தி மாவு போல் பிசைந்த்து) பாத்திரத்தின் மூடியுடன் சேர்த்து நன்கு ஒட்டி விடவும்.

  10. 10

    பாத்திரத்தை சிறு தீயில் வைத்து அரை மணிநேரம் வரை வேக விடவும். முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes