நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#JP என் வீட்டில்,சிக்கன் குழம்பு செய்தால்,அதிக மசாலா இல்லாமல்,தண்ணியாகவும் இல்லாமல், சாப்பிட விரும்புவார்கள். இந்த முறையில் செய்த பொழுது என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ,அவைகளை பூர்த்தி செய்ததுபோல் இருந்தது. நீங்களும் முயன்று பாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
6பேர்
  1. 1கி நாட்டுக்கோழி
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1சிறிய தக்காளி
  4. 2மிளகாய்
  5. 1+2டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. சிறிதளவுகறிவேப்பிலை
  9. 2ஸ்பூன் மல்லித்தழை
  10. 1/4கப் நல்லெண்ணெய்
  11. மசாலா அரைக்க:
  12. 4ஸ்பூன் மல்லி விதை
  13. 6வரமிளகாய்
  14. 6காஷ்மீரி மிளகாய்
  15. 1/2ஸ்பூன் மிளகு
  16. 1ஸ்பூன் சீரகம்
  17. 1டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
  18. 10கிராம்பு
  19. 2துண்டு பட்டை
  20. 1அண்ணாச்சி மொக்கு
  21. 1ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். சிக்கன் துண்டுகளை கழுவி வைக்கவும்.

  2. 2

    நன்கு கழுவிய சிக்கனில்,உப்பு,மஞ்சள் தூள்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து 30நிமிடங்கள் ஊற விடவும்.

  3. 3

    வெறும் வாணலியில்,அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து,ஆற வைத்து அரைக்கவும்.

  4. 4

    பின்,வெங்காயம், தக்காளி,1மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

  5. 5

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு,1மிளகாய் மற்றும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  6. 6

    பின்,வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும்,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.

  7. 7

    பின் சிக்கன்துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து,7-10 நிமிடங்களுக்கு மூடி போட்டு,அடிக்கடி கிளறவும்.இப்படி செய்தால் கவுச்சி வாசம் போகும்.

  8. 8

    இனி 700ml அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.

    கொதித்ததும்,உப்பு சரி பார்த்து மிதமான தீயில் வைத்து மூடி போட்டு நன்கு வேக விடவும். குக்கரில் செய்தால் 3-4 விசில் விட்டு எடுக்கவும்.

  9. 9

    சிக்கன் நன்றாக வெந்திருக்கும். கடைசியாக மல்லித்தழை தூவவும். இட்லி தோசை சாதம் இவற்றிற்கு சுவையாக இருக்கும்.

  10. 10

    அவ்வளவுதான். சுவையான, வாசனையான, நாட்டுக் கோழி குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes