எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

13 பரிமாறுவது
  1. மேல் மாவு செய்ய:
  2. 3 கப் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு
  3. 1_1/2 கப் தண்ணீர்
  4. தேவையானஅளவு உப்பு
  5. 2 குழிகரண்டி நல்லெண்ணெய்
  6. பூரணம் செய்ய:
  7. 1/4 கிலோ கடலைப்பருப்பு
  8. 400 கிராம் வெல்லம்
  9. 1 முழு தேங்காய்
  10. 2 ஸ்பூன் ஏலத்தூள்
  11. 2டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேல் மாவு செய்ய:. தண்ணீர் உடன் உப்பு மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  2. 2

    பின் பதப்படுத்தப்பட்ட அரிசி மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்

  3. 3

    பூரணம் செய்ய:. கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் வேகவிட்டு கிள்ளுபதத்தில் வெந்ததும் இறக்கி ஆறவைக்கவும் கடலைப்பருப்பு கண்டிப்பாக குழைய கூடாது

  4. 4

    ஆறிய பருப்பை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி வைக்கவும் தேங்காயை துருவி வைக்கவும்

  6. 6

    வாணலியில் நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் பின் வெல்ல கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்

  7. 7

    கொதிக்கும் போது ஏலத்தூள் உதிர்த்த கடலைப்பருப்பு சேர்த்து நன்கு கெட்டியாக கிளறி இறக்கவும்

  8. 8

    கையில் நெய் தொட்டு கொண்டு மேல் மாவை நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

  9. 9

    பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் நெய் தடவி கொண்டு உருட்டிய உருண்டைகளை நடுவில் அழுத்தி கொண்டு வந்தால் கிண்ணம் போன்ற வடிவம் கிடைக்கும்

  10. 10

    பின் நடுவில் பூரணம் வைத்து மடித்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes