எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 கப் உதிராக வடித்த சாதம்
  2. 4 கேரட்
  3. 2 வெங்காயம்
  4. சிறிது கறிவேப்பிலை
  5. சிறிது கொத்தமல்லி தழை
  6. 4 பச்சை மிளகாய்
  7. 10 வறுத்த முந்திரி
  8. 4டேபிள்ஸ்பூன் நெய்
  9. 6டேபிள்ஸ்பூன் எண்ணெய்்்்
  10. 1 ஸ்பூன் கடுகு
  11. 1/4 கப் தேங்காய் துருவல்
  12. வறுத்து பொடித்த:
  13. 2 ஸ்பூன் கொத்தமல்லி விதை
  14. 1 ஸ்பூன் சீரகம்
  15. 1/2 ஸ்பூன் மிளகு
  16. 2 வரமிளகாய்
  17. 1/2 ஸ்பூன் சோம்பு
  18. 4டேபிள்ஸ்பூன் கொப்பரை தேங்காய் துருவல்
  19. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின் பொடித்த பொடி மற்றும் உதிராக வடித்த சாதம் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    இறுதியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கிளறவும்

  7. 7

    பின் வறுத்த முந்திரி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes