பீட்ரூட் ரைஸ் (Beet Rice Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

பீட்ரூட் ரைஸ் (Beet Rice Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் உதிராக வடித்த சாதம்
  2. 1/2 கப் துருவிய பீட்ரூட்
  3. 1/4 கப் தேங்காய் துருவல்
  4. 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  5. 1/2 ஸ்பூன் கடுகு
  6. 2 பச்சை மிளகாய்
  7. 3 பல் பூண்டு
  8. கறிவேப்பிலை சிறிது
  9. 6டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. உப்பு தேவையான அளவு
  11. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  12. வறுத்து பொடிக்க:
  13. 1 பட்டை, கிராம்பு,ஏலக்காய்
  14. 1 ஸ்பூன் சீரகம்
  15. 2 ஸ்பூன் தனியா
  16. 1/4 ஸ்பூன் வெந்தயம்
  17. 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  18. 10 மிளகு
  19. 2 டேபிள்ஸ்பூன் கொப்பரை தேங்காய் துருவல்
  20. 6 வரமிளகாய்
  21. 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடித்து வைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்

  3. 3

    பின் நறுக்கிய பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் துருவிய பீட்ரூட் ஐ சேர்த்து வதக்கவும்

  6. 6

    மெல்லிய தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்

  7. 7

    பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்

  8. 8

    பின் வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    பின் உதிராக வடித்த சாதம் மற்றும் உப்பு,நெய்யை பரவலாக ஊற்றி கிளறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes