தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 750 கிராம் சிக்கன்
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1 ஸ்பூன் தனியா தூள்
  7. 1 ஸ்பூன் மிளகு தூள்
  8. 1 ஸ்பூன் கரம் மசாலா
  9. 1டீஸ்பூன் கல் உப்பு
  10. 1/2 ஸ்பூன் சோம்பு தூள்
  11. 1 கொத்து கறிவேப்பிலை
  12. 1 பட்டை
  13. 1 இலவங்கம்
  14. 15 சிறிய வெங்காயம்
  15. 4டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.

  2. 2

    பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொடிகள், உப்பு சேர்த்து நைசாக அரைத்து அதை சிக்கன் மேல் தடவி 1 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து ஊற வைக்கவும்.

  3. 3

    1 மணி நேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, இலவங்கம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

  4. 4

    சோம்பு தூள், சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி ஊற வைத்த சிக்கன் சேர்த்து 200 மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  5. 5

    கொதித்ததும் அடுப்பை சிறிய தீயில் வைத்து மூடி 30 நிமிடங்கள் வேக விடவும்.

  6. 6

    சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes