பரங்கிகாய் பாயாசம்/பரங்கிகாய் கீர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
austin tx

பரங்கிகாய் கீர் ஒரு பாரம்பரிய உணவு-தேங்காய் பால்,பரங்கிகாய்,ஜவ்வரிசி,முந்திரி சேர்த்து செய்யப்படும் உணவு.இது ஒரு இனிப்பான உணவு,எளிமையாக செய்யக்கூடியது.இந்த உணவின் ஸ்பெஷல் பரங்கிகாயின் சுவையை உணரமுடியாது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 நபருக்கு
  1. 2 கப்பரங்கிகாய் நறுக்கியது
  2. 1 கப்வெல்லம்
  3. 1 மேஜைக்கரண்டிநெய்
  4. 1/8 கப்ஜவ்வரிசி
  5. 1 கப்துருவிய தேங்காய்
  6. 8முந்திரி
  7. 1 தேக்கரண்டிஏலக்காய் பவுடர்
  8. 6--7தேங்காய்த்துண்டுகள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் பரங்கிக்காய், 1/2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேகவைக்கவும்.

  2. 2

    தண்ணீரை வடித்து விட்டு மசித்து தனியாக் வைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஜவ்வரிசியை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்

  4. 4

    1/2 கப் திக்கான தேங்காய்ப்பால்,1/2 கப் 2 ம் தேங்காய்ப்பால்,1/2-கப் 3-ம் தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் மசித்த பரங்கிகாய் சேர்த்து கலக்கவும்.

  6. 6

    வெல்லம் சேர்த்து திக்காகும் வரை வேக விடவும்.

  7. 7

    வேக வைத்த ஜவ்வரிசியை சேர்த்து 3-ம் தேங்காய்ப்பால் சேர்த்து 3--4 நிமிடம் வேக விடவும்.

  8. 8

    பிறகு அதில் திக்கான தேங்காய்பால் மற்றும் ஏலக்காய் பவுடர் சேர்க்கவும்.

  9. 9

    ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் தேங்காய்த்துண்டுகள்,முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

  10. 10

    வறுத்த முந்திரியை பரங்கிக்காய் பாயாசத்தில் சேர்த்து சூடாக பரிமாறவும்.

  11. 11

    பாயாசத்தை சுவைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aswani Vishnuprasad
Aswani Vishnuprasad @cook_12258614
அன்று
austin tx
My blog: https://passionofcookingaswani.blogspot.com/& fb pagehttps://www.facebook.com/aswani.kitchen/?ref=aymt_homepage_panel
மேலும் படிக்க

Similar Recipes