தக்காளி 🍅 குழம்பு (Thakkali Kulambu Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

தக்காளி 🍅 குழம்பு (Thakkali Kulambu Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3-4தக்காளி - (பெரியது மற்றும் நறுக்கியது)
  2. சிறிதுகொத்தமல்லி
  3. தேவையான அளவுஉப்பு
  4. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  5. வறுத்து அரைப்பதற்கு
  6. 1/2 கப்சின்ன வெங்காயம்
  7. 3/4 கப்தேங்காய்
  8. 2 டேபிள் ஸ்பூன்மல்லி
  9. 1 டீஸ்பூன்சீரகம்
  10. 2-3வரமிளகாய்
  11. 1 டீஸ்பூன்எண்ணெய்
  12. தாளிப்பதற்கு
  13. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  14. 1 டீஸ்பூன்கடுகு
  15. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு வாணலிடிய அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

  2. 2

    பின்னர் அதில் தேங்காய் சேர்த்து கிளறி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தக்காளியை சேர்த்து, அதில் உப்பு தூவி, 10 நிமிடம் நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

  4. 4

    இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறிவிட்டால், சுவையான செட்டிநாடு தக்காளி குழம்பு ரெடி!!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes