பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#அவசர சமையல்

எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.
கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம்.

பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)

#அவசர சமையல்

எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.
கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் பாஸ்மதி அரிசி
  2. 1 கப் துருவிய தேங்காய்
  3. 1டீஸ்பூன் கடுகு
  4. 2டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 2டீஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 1டீஸ்பூன் எள்ளு
  7. 5டீஸ்பூன் வேர்க்கடலை
  8. 10முந்திரிப்பருப்பு
  9. கருவேப்பிலை
  10. 4பச்சை மிளகாய்
  11. 1காய்ந்த மிளகாய்
  12. பெருங்காயம்
  13. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு ஆற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை மற்றும் முந்திரியை தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு எள்ளு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பச்சை மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.அதனுடன் வறுத்த முந்திரி வேர்க்கடலை சேர்க்கவும்.

  4. 4

    இப்போது துருவிய தேங்காயை அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    தேங்காய் நன்கு வறுபட்டதும்,ஆறிய பாஸ்மதி சாதத்தை அதனுடன் சேர்த்து உதிரியாக கிளறவும்.

  6. 6

    சுவையான பாஸ்மதி தேங்காய் சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes