Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 6பிஞ்சு கத்திரிக்காய்
  2. 4டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  3. 1 டேபிள்ஸ்பூன் வர கொத்தமல்லி
  4. 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 1 டேபிள்ஸ்பூன்வேர்க்கடலை
  6. 1 டேபிள்ஸ்பூன்கொப்பரை தேங்காய்
  7. 7காய்ந்த மிளகாய்
  8. புளி சிறிதளவு
  9. மஞ்சள்தூள் சிறிதளவு
  10. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வர கொத்தமல்லி, வேர்க்கடலை,உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கொப்பரைத் தேங்காய் இவை அனைத்தையும் வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து கடைசியாக அதில் சுத்தம் செய்த புளியை சேர்த்து வறுக்கவும். ஆறவைத்து அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.{தண்ணீர் சேர்க்காமல்}

  2. 2

    கத்தரிக்காயில் இருக்கும் காம்பை நீக்கிவிட்டு நடுவில் அறிந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.

  3. 3

    பொடித்து வைத்திருக்கும் மசாலாவை கத்தரிக்காயில் ஸ்டஃப் செய்யவும்.

  4. 4

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஸ்டஃப் செய்து வைத்திருக்கும் கத்திரிக்காயை பொறுமையாக வதக்கவும். மிதமான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும். வேகும் பொழுது இரண்டு சிட்டிகை உப்பு அதன் மேல் தூவி விடவும். எல்லா பக்கமும் வேகும் படி திருப்பிவிட்டு வேக வைக்கவும்.

  5. 5

    சுவையான காரசாரமான ஸ்டஃப்டு கத்திரிக்காய் ரெடி. இது சாம்பார்,ரசம்,பிரியாணி என அனைத்திற்கும் சைடிஷ் ஆக பொருந்தும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes