மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அமேரிக்கா

மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
5 பேர்
  1. 1 கிலோ மட்டன்
  2. 1 கிலோ பாஸ்மதி அரிசி
  3. 300 கிராம் வெங்காயம்
  4. 250 கிராம் தக்காளி
  5. 150 மிலி ஆயில்
  6. 100 மிலி நெய்
  7. 75 கிராம் இஞ்சி
  8. 40 கிராம் பூண்டு
  9. ஒருகையளவு கொத்தமல்லி
  10. ஒரு கையளவு புதீனா
  11. 6 பச்சை மிளகாய்
  12. 150 மிலி தயிர்
  13. 8 ஏலக்காய்
  14. 6 கிராம்பு
  15. 2 பட்டை
  16. 2பிரியாணி இலை
  17. 1 ஸ்டார் அனிஸ்
  18. 1/4 தேக்கரண்டியளவு சோம்பு
  19. 1/4 தேக்கரண்டியளவு சீரகம்
  20. 10 கிராம் மிளகாய்த்தூள்
  21. 1 எலுமிச்சை

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    இஞ்சி பூண்டை விழுதாகவும் கரம் மசாலா விற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை பொடியாகவும் அரைத்து கொள்ளவும்

  2. 2

    மட்டன் ஐ சுத்தம் செய்து அதன் உடன் தயிர் அரைத்த இஞ்சி பூண்டு விழுதில் பாதியளவு சேர்க்கவும், தயிர், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி குக்கரில் வேக வைக்கவும்

  3. 3

    அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் நெய் எண்ணெய் ஊற்றி சூடானதும் நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் கரம் மசாலா பொடி சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  6. 6

    பின் நறுக்கிய தக்காளி கொத்தமல்லி இலை புதீனா பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  7. 7

    எல்லாம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மட்டன் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும்

  8. 8

    அரிசி அளவிற்கு 1 1/2 அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  9. 9

    அரிசி சேர்த்து கொதிக்க விடவும் பின் 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து தண்ணீர் வற்றி அரிசி வெந்ததும் 20 நிமிடம் தம்மில் போடவும்

  10. 10

    மட்டன் தம் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes