ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)

Manickavalli M
Manickavalli M @Mani_2090

#ve

ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)

#ve

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1 டேபிள்ஸ்பூன் பச்சை அரிசி
  2. 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  3. 2பச்சை மிளாகாய்
  4. 1/2இஞ்சு அளவுக்கு இஞ்சி துண்டு
  5. 10 சின்ன வெங்காயம்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. 1/2 டேபிள்ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  8. 1/2 டேபிள்ஸ்பூன் சீரகம்
  9. 1/4 டேபிள்ஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. 2 மோர் மிளகாய் வத்தல்
  11. 1 கொத்து கறிவேப்பிலை
  12. 1/4 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்
  13. 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. தண்ணீர் தேவையான அளவு
  16. 300 கிராம் கெட்டியான பசும் தயிர்
  17. சிறிதுகொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பச்சை அரிசி மற்றும் கடலைப்பருப்பை 15 நிமிடங்கள் ஊறவைத்து பச்சை மிளாகாய் இஞ்சி சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, மோர் மிளகாய் வத்தல், வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

  3. 3

    கெட்டியான தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தண்ணீர் சேர்க்காமல் மோரக கடைந்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வேகவிடவும்.

  5. 5

    கலவை நன்கு வெந்து கெட்டியாகும் போது கடைந்த தயிரை ஊற்றி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு நுரை கூடி வரும் போது சிறிது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manickavalli M
Manickavalli M @Mani_2090
அன்று

Similar Recipes