திண்டுக்கல் தலப்பா கட்டி மட்டன் பிரியாணி

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ மட்டன்
  2. 1/2 கிலோ ஜீரகசம்பா அரிசி
  3. பிரியாணி மசாலா பொடி செய்ய
  4. 1பிரிஞ்சி இலை
  5. 2பட்டை
  6. 4கிராம்பு
  7. 4ஏலம்
  8. 1 டேபிள் ஸ்பூன் மல்லி
  9. 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  10. 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  11. 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  12. 4வர மிளகாய்
  13. 4முந்திரி
  14. 10சின்ன வெங்காயம்
  15. 1 துண்டு இஞ்சி
  16. 8 பல் பூண்டு
  17. 4பச்சை மிளகாய்
  18. 1எலுமிச்சை
  19. 4 ஸ்பூன் தயிர்
  20. 1 சிட்டிகை மஞ்சள்
  21. கொஞ்சம் மல்லி மற்றும் புதினா
  22. தேவைக்கு எண்ணெய்
  23. நெய்
  24. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மட்டனை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.சீரகம். சோம்பு, மல்லி, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய், முந்திரி பொடித்து கொள்ளவும். சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் அரைத்து கொள்ளவும்.

  2. 2

    சட்டியில் 4 தேக்கரண்டி எண்ணெய் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்பு பிரியாணி மசாலாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.பின் அதில் வேக வைத்த மட்டன், ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு. தயிர் சேர்த்து நன்கு கிளறவும்.பின்பு புதினா., கொத்தமல்லி சேர்த்து1:2 என்ற கணக்கில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    கொதி வந்ததும் 20 நிமிடம் ஊற வைத்த அரிசியை சேர்க்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொள்ளவும்.பின் நன்கு கொதித்ததும் அதன் மேல் சிறிது கொத்தமல்லி புதினா இலைகள் தூவி 2 ஸ்பூன் நெய் விட்டு 30 நிமிடம் தம் போடவும்.பின் 15 நிமிடங்கள் கழித்து பரிமாறவும். சுவையான திண்டுக்கல் தலப்பா கட்டி பிரியாணி தயார்!!!!

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mammas Samayal
Mammas Samayal @Mammas_18549953
அன்று

Similar Recipes