பாலக் சப்பாத்தி (Palak Chapati Recipe In Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

பாலக் சப்பாத்தி (Palak Chapati Recipe In Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் கோதுமை மாவு
  2. தேவையான அளவு உப்பு
  3. 1 தேக்கரண்டி மிளகு
  4. 1/2 தேக்கரண்டி சீரகம்
  5. 2 கப் சுத்தம் செய்த பாலக் கீரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    2 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து பாலக் கீரையை அதில் சேர்த்து இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைக்கவும்.

  2. 2

    பாலக் கீரையை வெந்நீரிலிருந்து எடுத்து குளிர்ந்த நீரில் அலசவும்.

  3. 3

    அலசிய பாலக் கீரையை வடிகட்டி எடுக்கவும்.

  4. 4

    வடிகட்டிய பாலக் கீரையுடன், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த பாலக் விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவாகப் பிசையவும்.

  6. 6

    பிசைந்த மாவை சப்பாத்திகளாகத் தேய்த்து சுட்டு எடுக்கவும்.

  7. 7

    குருமா அல்லது தக்காளி தொக்குடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes