எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 400 கிராம்சிக்கன்
  2. 1 பெரியதுவெங்காயம்
  3. 3 மீடியம்தக்காளி
  4. 1 மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  5. 2 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  6. 1/2 தேக்கரண்டிமிளகுத்தூள்
  7. 4 தேக்கரண்டிகறிமசாலா
  8. 1 கைப்பிடிகொத்தமல்லி
  9. 2மிளகாய்
  10. 1 தேக்கரண்டிகாய்ந்த வெந்தயக்கீரை
  11. 1 தேக்கரண்டிகரம் மசாலா
  12. 2ஏலக்காய்
  13. 1/2 தேக்கரண்டிசோம்பு
  14. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெங்காயத்தில் சிறுப்பகுதியை பொடியாக நறுக்கி கொண்டு மீதியை அரைத்து கொள்ளவும்

  2. 2

    தக்காளி யை தனியே அரைத்து கொள்ளவும். சிக்கன் உடன் மிளகாய்த்தூள் உப்பு சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.

  3. 3

    ஒரு குக்கரில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு ஏலக்காய் சோம்பு சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் சிவந்து வரும்போது அரைத்த வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    மிளகாய்த்தூள் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

  6. 6

    பின் ஊற வைத்த சிக்கன் கறி மசாலா தேவையான அளவு உப்பு தண்ணீர் மிளகாய் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அணைக்கவும்.

  7. 7

    சிக்கன் வெந்ததும் கரம் மசாலா கொத்தமல்லி இலை காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.

  8. 8

    சிம்பிளான சிக்கன் கிரேவி தயார். வெள்ளசாதம் சப்பாத்தி உடன் அருமையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima's Kitchen
Fathima's Kitchen @fmcook_1993
அன்று

Similar Recipes