கோதுமை மாவு முட்டை தோசை (Gothumai maavu muttai dosai recipe in tamil)

Jayasakthi
Jayasakthi @cook_20204052
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 முட்டை
  2. ஒரு டீஸ்பூன் உப்புத்தூள்
  3. அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. ஒரு கப் கோதுமை மாவு
  5. ஒரு வெங்காயம்
  6. ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை
  7. ஒரு டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இரண்டு டீஸ்பூன் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கவும்.

  2. 2

    இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்யவும்.

  3. 3

    கோதுமை மாவில் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அதை அடித்து வைத்துள்ள முட்டையுடன் கலக்கவும்

  4. 4

    இந்த மாவில் சில்லி ஃப்ளேக்ஸ் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்க்கவும். இப்போது தோசை மாவு தயார்.

  5. 5

    தோசைக்கல்லை சூடுபடுத்தி ஒரு கரண்டி மாவை ஊற்றி மேலே நல்லெண்ணெய் அரை டீஸ்பூன் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்

  6. 6

    இது மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருக்கும்

  7. 7

    குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற சிற்றுண்டி ஆகும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi
Jayasakthi @cook_20204052
அன்று

Similar Recipes