உடனடி வெள்ளரிக்காய் தோசை

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#நாட்டு காய்கறி உணவுகள்
காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது.

உடனடி வெள்ளரிக்காய் தோசை

#நாட்டு காய்கறி உணவுகள்
காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 வெள்ளரிக்காய்
  2. 1 கப் வெள்ளை ரவை
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. 1/4 கப் தயிர்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 டீஸ்பூன்தலா மிளகு,சீரகம்
  7. 1டீஸ்பூன் அளவு உப்பு
  8. தேவையானஅளவுதோசை சுட எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் நறுக்கிய வெள்ளரிக்காய்,தயிர், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    இந்த கலவையில் ரவை,அரிசி மாவு, உப்பு, மிளகு,சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    இந்த கலவையை இருபது நிமிடம் ஊற வைக்கவும்.இந்த மாவு சிறிது நீர்க்க இருக்க வேண்டும்

  4. 4

    ப்ளாட்டான தோசை கல் சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை சுற்றி விட்டு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்

  5. 5

    வித்தியாசமான உடனடியாக செய்ய கூடிய வெள்ளிரிக்காய் தோசை ரெடி. இதற்கு தொட்டு கொள்ள வெல்லம் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes