எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. 2 கேரட்
  2. 7 பீன்ஸ்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1டீஸ்பூன் தனியா தூள்
  6. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. உப்பு
  8. மசாலா அரைக்க
  9. 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  10. 2 பச்சை மிளகாய்
  11. 1/2 இன்ச் இஞ்சி
  12. 1/2டீஸ்பூன் சோம்பு
  13. 1/2டீஸ்பூன் கச கசா
  14. 4 முந்திரி
  15. தண்ணீர் சிறிது
  16. தாளிக்க
  17. 2டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  18. 1 பட்டை
  19. 2 ஏலக்காய்
  20. 2 கிராம்பு
  21. 1/2டீஸ்பூன் சீரகம்
  22. 2 துளி எலுமிச்சை பழம் சாறு
  23. கருவேப்பிலை
  24. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி நறுக்கி வைக்கவும். தக்காளி 2 கழுவி நறுக்கி வைக்கவும்.கேரட் 2 தோல் நீக்கி, பீன்ஸ் 7 கழுவி நறுக்கி வைக்கவும்.தாளிக்க பட்டை 1,ஏலக்காய் 2,கிராம்பு 2,சீரகம் 1/2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும். தேங்காய் துருவல் மசாலா அரைக்க 3 டேபிள் ஸ்பூன் எடுத்து வைக்கவும்.

  2. 2

    தேங்காயுடன் சோம்பு 1/2 டீஸ்பூன்,முந்திரி 4, கசகசா 1/2 டீஸ்பூன்,இஞ்சி 1/2 இன்ச்,2 பச்சை மிளகாய் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும்.கொத்தமல்லி தழை கழுவி எடுத்து வைக்கவும்.

  3. 3

    கருவேப்பிலை சிறிது கழுவி எடுத்து வைக்கவும்.குக்கரில் தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு பட்டை கிராம்பு,ஏலக்காய்,சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை வதக்கி,

  4. 4

    பொன்னிறமானவுடன், தக்காளி,நறுக்கிய கேரட் பீன்ஸ் 2 நிமிடம் வதக்கி தனியா தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து கிளறி விடவும்.

  5. 5

    உப்பு, தண்ணீர் சிறிது விட்டு அரைத்த விழுதை சேர்த்து கலக்கி விடவும்.

  6. 6

    நன்கு கலக்கி குக்கரில் 2 விசில் வேக விடவும்.குக்கரில் இருந்து கிண்ணத்திற்கு மாற்றி கொத்தமல்லி தூவி எலுமிச்சை சாறு 2 துளி விட்டு கலக்கி பரிமாறவும்.

  7. 7

    இட்லி தோசை இடியப்பம் சப்பாத்திக்கு ஏற்றது.டேஸ்ட் சூப்பர்.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes