ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 250 கிராம் சிக்கன்
  2. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/4டீஸ்பூன் மிளகுத்தூள்
  4. 2 சிட்டிகை கரம்மசாலா
  5. 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  6. தேவையானஅளவு உப்பு
  7. 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  8. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  10. 10 முந்திரி
  11. 6 பாதாம்
  12. 2 வெங்காயம்
  13. 3 தக்காளி நன்றாக பழுத்தது
  14. 2 சிட்டிகை மஞ்சள் தூள்
  15. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  16. 1/4டீஸ்பூன் மல்லித்தூள்
  17. 1/4டீஸ்பூன் சீரகத்தூள்
  18. 1/4டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  19. 1 ஏலக்காய்
  20. 2 பச்சைமிளகாய்
  21. கசூரி மேத்தி சிறிது
  22. 1டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  23. 3டேபிள்ஸ்பூன் பால்
  24. 1/4டீஸ்பூன் நட்ஸ் பவுடர்
  25. தேவையானஅளவு மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது உப்பு,எலுமிச்சைச்சாறு கரமசாலா, தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் அத்துடன் சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்

  2. 2

    சிக்கன் முக்கால் பாகம் பொரித்தெடுக்கவும்

  3. 3

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்க்கவும்
    முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் ட்ரான்ஸ்பரன்ட் (transparent) ஆனதும் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்

  5. 5

    பச்சை வாசனை போனதும் இத்துடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சீரகத்தூள், கரம்மசாலா தூள்,ஏலக்காய், உப்பு ஆகிவற்றை சேர்க்கவும்

  6. 6

    அதனை நன்றாக வதக்கவும் அதன் பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்க்கவும் நன்றாக மசிந்து போகும்வரை வதக்கவும்

  7. 7

    நன்றாக ஆற விட்டு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும்

  8. 8

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

  9. 9

    அத்துடன் அரைத்த தக்காளி கலவையை சேர்க்கவும்

  10. 10

    தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
    15 நிமிடம் வரை வேக விடவும்

  11. 11

    அத்துடன் கசூரி மேத்தி அல்லது வெந்தயப் பொடி,1 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  12. 12

    சிக்கனை சேர்க்கவும் 5 நிமிடம் வேகவிடவும்

  13. 13

    உப்பை சரி பார்க்கவும் சால்ட் பட்டர் சேர்த்து இருந்தால் அதிலும் உப்பு இருக்கும்

  14. 14

    2 டேபிள் ஸ்பூன் பாலை நன்றாக சுண்டி காய்ச்சவும் சிறிது பட்டர் மற்றும் சிறிது nuts பவுடர் சேர்க்கவும்

  15. 15

    நன்றாக கலந்து விட்டு ஆறவிடவும் ஆறியதும் மிக்ஸியில் அடித்து எடுக்கவும்

  16. 16

    கடைசியாக மல்லி இலை சிறிது பால் கிரீம் சேர்த்து கலந்து இறக்கவும்

  17. 17

    ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes