கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

# அம்மா

என் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பரோட்டா:-
  1. -2 கப்கோதுமை மாவு
  2. தேவையான அளவுஉப்பு தண்ணீர்
  3. -4 டீஸ்பூன்எண்ணெய்
  4. காய்கறி குருமா:-
  5. கேரட் பீன்ஸ்
  6. உருளைக்கிழங்கு
  7. 1 கப்காலிபிளவர், பட்டாணி சேர்த்து-
  8. 3பெரிய வெங்காயம்
  9. 2தக்காளி
  10. 1 டீஸ்பூன்சோம்பு-
  11. 2 டீஸ்பூன்கொத்தமல்லி-
  12. 1 டீஸ்பூன்சீரகம்-
  13. 1 டீஸ்பூன்நிலக்கடலை-
  14. 2வரமிளகாய்
  15. சிறிதுகறிவேப்பிலை கொத்தமல்லி இலை
  16. தேவையான அளவுஉப்பு
  17. 2 டீஸ்பூன்எண்ணெய்-
  18. -1 துண்டு,இஞ்சி
  19. 6 பல்பூண்டு-
  20. 1பட்டை கிராம்பு ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை-each 1
  21. -2 டீஸ்பூன்தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பரோட்டா:- முதலில் பரோட்டாவுக்கு கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு தண்ணீர் மற்றும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கையினால் மாவை இழுத்து இழுத்து மாவை பிசைந்து 3-4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்... மாவின் மேல் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தேய்த்து ஒரு ஈரத் துணியை கொண்டு மூடி வைக்கவும். பின்னர் சாப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து ஒரு கத்தியால் நன்றாக சிறு சிறு கோடுகளாக வெட்டி, அதை கையில் உருட்டி வட்ட வடிவில் உருட்டி 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மீண்டும் 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் சப்பாத்தி போல் பரத்தி வைக்கவும்.. கையினால் கூட வட்ட வடிவில் பரத்தி வைக்கவும்.பின் ஒரு சப்பாத்தி கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பரோட்டாவை போட்டு இரு புறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான கோதுமை பரோட்டா ரெடி.

  3. 3

    காய்கறி குருமா:- முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.. வெங்காயம் தக்காளி மற்றும் காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.. ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம் தக்காளி வரமிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.. கொத்தமல்லி, சீரகம், சோம்பு, பிரியாணி இலை வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்... தேங்காய் நிலக்கடலை சேர்த்து நன்றாக வதக்கவும்..

  4. 4

    வறுத்த கலவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வேறு ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் 1/2 சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்றாக காய்கறி வேக விடவும்...10 நிமிடங்கள் கழித்து சிறிது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்..

  5. 5

    இப்போது சூடான சுவையான காய்கறி குருமா ரெடி... கோதுமை பரோட்டாவும் காய்கறி குருமா ரெடி.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல்...கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes