வேர்க்கடலை சாக்கோ கட்லி (Verkadalai chocco kathli Recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#அம்மா #nutrient2

வேர்க்கடலை சாக்கோ கட்லி (Verkadalai chocco kathli Recipe in Tamil)

#அம்மா #nutrient2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் வறுக்காத வேர்க்கடலை
  2. 3/4கப் சர்க்கரை
  3. 10முந்திரி பருப்பு
  4. 1ஸ்பூன் கோகோ பவுடர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் சிறிது நெய் விட்டு வேர்க்கடலையை லேசாக வறுத்து தோலை நீக்கி விடவும்... நன்றாக வருத்தால் நிறம் மாறி விடும்

  2. 2

    மிக்ஸியில் வேர்க்கடலை முந்திரி பருப்பை சேர்த்து விட்டு விட்டு அரைக்கவும்.. தொடர்ந்து அரைத்தால் வேர்க்கடலையில் இருந்து எண்ணெய் வரும். அது வந்தால் கட்லி நன்றாக இருக்காது

  3. 3

    அரைத்ததை நன்றாக சலித்து கொள்ளவும்

  4. 4

    கடாயில் சர்க்கரை சேர்த்து கரைந்து ஒரு கம்பி பதம் வர வேண்டும்

  5. 5

    பதம் வந்ததும் வேர்க்கடலை பொடியை சேர்த்து நன்கு கிண்டவும்.. சுருண்டு வந்ததும் நெய் தடவிய பட்டர் பேப்பரில் கொட்டி ஆற விடவும்

  6. 6

    அதில் சிறிது எடுத்து அத்துடன் கோகோ பவுடர் சேர்த்து பிசைந்து பட்டர் பேப்பரில் அதை நன்றாக தேய்த்து டைமண்ட் வடிவில் வெட்டினால் கட்லி தயார்...

  7. 7

    விருப்பமான வடிவில் வெட்டியும் இதனை பறிமாறலாம்..

  8. 8

    சுவையான சத்தான வேர்க்கடலை சாக்கோ கட்லி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes