சேனைக்கிழங்கு வடை (Senaikilanku vadai recipe in tamil)

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
Erode

வாழை பூ, தண்டு இதை எல்லாம் வைத்து தான் வடை செய்வது வழக்கம்.. நான் வழக்கத்தை மாற்றி சேனை கிழங்கு வைத்து வடை செய்தேன்.. மிகவு‌ம் சத்துள்ள உணவு.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. #arusuvai 3
(very yummy and crispy dish)

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 200 கிராம்சேனை கிழங்கு
  2. 3வெங்காயம்
  3. 3ப‌ச்சை மிளகாய்
  4. 1 ஸ்பூன்சீரகம்
  5. 5 பல்பூண்டு
  6. கைப்பிடி அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி
  7. 4 ஸ்பூன்பொறிகடலை
  8. சிறிதளவுகடலை மாவு
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சேனை கிழங்கை சுத்தம் செய்து துருவி வைத்து அதில் வினிகர் ஒரு மூடி சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்..

  2. 2

    அதன் பிறகு சேனை கிழங்கை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.. அதன் பிறகு மேலே உள்ள பொருளை வெங்காயம் தவிர மற்ற பொருட்களை அரைத்து உப்பு சேர்த்து ஒரு இரண்டாக அரைத்து கொள்ளவும்..

  3. 3

    பிறகு வெங்காயம், கடலை மாவு சேர்த்து பிசையவும்..

  4. 4

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் அரைத்து வைத்த கலவையை வடை போல தட்டி போடவும்..

  5. 5

    அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும்.. இரு புறமும் பொன் நிறமாக மாறியதும் எடுக்க வேண்டும்.. இதே நமது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சேனைக்கிழங்கு வடை ரெடி ✌️👍

  6. 6

    செ‌ய்து பார்த்து சொல்லுங்கள் சகோதரிகளே 🙏🏻

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
அன்று
Erode
I am happiest mother in the world
மேலும் படிக்க

Similar Recipes