Methi Chapati

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai6 இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் கோதுமை மாவு
  2. 1 கப் வெந்தய கீரை
  3. 1 வெங்காயம்
  4. 1/2 டீஸ்பூன் இஞ்சி
  5. 1/2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள்
  6. 1/4 டீஸ்பூன் சீரகம்
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. தேவைக்கேற்ப உப்பு
  9. தேவைக்கேற்ப நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், கழுவி சுத்தம் செய்த வெந்தயக்கீரை& பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு, மஞ்சள் தூள் சிறிது சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

  2. 2

    ஆறிய பின் அதில் கோதுமை மாவு தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசையவும்.

  3. 3

    பிசைந்த மாவை 10 நிமிடம் கழித்து விருப்பத்திற்கேற்ற வடிவத்தில்மெல்லியதாக தேய்த்து மிதமான தீயில் நெய் சேர்த்து சப்பாத்தி சுட்டு எடுக்கவும். சுவையான வெந்தயகீரை சப்பாத்தி ரெடி.

  4. 4

    இதை வதக்காமல் பச்சையாகவும் சேர்த்து மாவு பிசையலாம். ஆனால் நான் எப்பொழுதும் வதக்கி தான் செய்வேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes