நாட்டுக்கோழி குழம்பு

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1_1/2 கிலோ நாட்டுக்கோழி
  2. 200 கிராம் சின்ன வெங்காயம்
  3. 4 தக்காளி
  4. 1_1/2 டேபிள் ஸ்பூன் பூண்டு விழுது
  5. 1_1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது
  6. 4 பச்சை மிளகாய்
  7. 1_1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  9. 2 ஸ்பூன் மல்லித்தூள்
  10. 1 ஸ்பூன் சீரகத்தூள்
  11. 1/2 ஸ்பூன் மிளகுத்தூள்
  12. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. கல்உப்பு தேவையான அளவு
  14. 200 மில்லி நல்லெண்ணெய்
  15. 1 ஸ்பூன் கடுகு
  16. 1 ஸ்பூன் சோம்பு
  17. கறிவேப்பிலை சிறிது
  18. கொத்தமல்லி தழை சிறிது
  19. மசாலா அரைக்க:
  20. 1 மூடி தேங்காய்
  21. 10 முந்திரி
  22. 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  23. கறிவேப்பிலை சிறிது
  24. 20 சின்ன வெங்காயம்
  25. 2 பட்டை
  26. 2 கிராம்பு
  27. 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    நாட்டுக்கோழி ஐ சுத்தம் செய்து அலசி வைக்கவும் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கி பின் விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் அலசிய சிக்கன் ஐ சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பின் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    பின் சிறிதளவு தண்ணீர் விட்டு இருபது நிமிடங்கள் வரை வேகவிடவும்

  7. 7

    பின் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes