கொத்தவரங்காய் பருப்பு சாம்பார்

#sambarrasam
பிஞ்சு கொத்தவரங்காயில் வெங்காயம் சேர்க்காமல் செய்தால் பருப்பு சாம்பார்.
சமையல் குறிப்புகள்
- 1
கொத்தவரங்காயை படத்தில் காட்டிபடி அரிந்து கொள்ளவும். ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கரைத்து கொள்ளவும்.ஒரு கப் துவரம் பருப்பை குக்கரில் தண்ணீர் சேர்த்து அதில் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து சவுண்ட் வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
கொத்தவரங்காய் அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அதில் மூன்று ஸ்பூன் சாம்பார் தூள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பிறகு அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் புளித்தண்ணீரை சேர்த்து கொள்ளவும். மீண்டும் புளித்தண்ணீர் வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
- 3
ஒரு ஸ்பூன் எண்ணையை சூடு செய்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு வரமிளகாய் பெருங்காயத் தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும். பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையை கடைசியாக சேர்த்து கலந்து விடவும். மிகவும் எளிதான சுவையான கொத்தவரங்காய் சாம்பார் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
-
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
-
-
டெல்டா சாம்பார்
#sambarrasamஎன்னுடைய பள்ளிப்பருவத்தில் மிக அதிகமான மழை பெய்யும் நான் பிறந்தது டெல்டா மாவட்டம் என்பதால் ஆண்டுதோறும் மழை வெள்ளம் கண்டிப்பாக இருக்கும் அப்பொழுது வெளியில் சென்று எந்த ஒரு காய்கறியும் வாங்க முடியாது இப்பொழுது நம் லாக்டவுன் அனுபவிப்பது போல் நாங்கள் அப்பொழுதே வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்து இருக்கின்றோம். வெயில் காலங்களில் கத்தரிக்காய் மாங்காய் ஆகியவற்றை வத்தல் போட்டு வைத்துக் கொள்வோம்.வடகம்வத்தல் தாளிப்பு வடகம் ஆகியவை செய்து வைத்துக் கொள்வோம். அத்துடன் தோட்ட காய்கறிகளையும் பயன்படுத்தி சமாளிப்போம் இப்பொழுது வெங்காயம் தக்காளி மல்லி கருவேப்பிலை இல்லாத கத்தரி வத்தல் சாம்பார் இது டெல்டா மாவட்டங்களில் மிக பிரபலம் . இந்த சாம்பாரின் சுவைக்கும் மணத்திற்கும் தாளிப்பு வடகம் ஹைலைட். தாளிப்பு வடகம் இல்லை என்றால் கடுகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு சுருள வதக்கி சாம்பாரில் கொட்டினால் மணமாக இருக்கும். இதே முறையில் மாங்காய் வத்தல் சேர்த்தும் சாம்பார் செய்யலாம். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen
More Recipes
கமெண்ட் (7)