எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. பன்னீர் ரோஸ்ட்:
  2. 200கிராம் பன்னீர்
  3. 1/4 தேக்கரண்டி மிளகாய்தூள்
  4. மஞ்சள்தூள்
  5. 1/2தேக்கரண்டி நெய்
  6. மசாலா செய்ய:
  7. 3மேஜைகரண்டி நெய்
  8. 1/2தேக்கரண்டி சீரகம்
  9. 1பட்டை துண்டு
  10. 2 கிராம்பு
  11. பிரியாணிஇலை
  12. 2பொடியாக நறுக்கியவெங்காயம்
  13. தக்காளி பேஸ்ட்
  14. 1மேஜைகரண்டி இஞ்சிபூண்டு பேஸ்ட்
  15. 1மேஜைகரண்டி கஷ்மீரி மிளகாய்தூள்
  16. 1மேஜைகரண்டி மல்லிதூள்
  17. 1/2மேஜைகரண்டி சீரகத்தூள்
  18. 3மேஜைகரண்டி தயிர்
  19. தண்ணீர்
  20. உப்பு
  21. 1/4தேக்கரண்டி கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு தட்டில் பன்னீர், மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து பிரட்டவும். வானலியில் நெய் சூடேரியதும் பிரட்டி வைத்த பன்னீரை பொறித்து தனியாக எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அதே வானலியில் நெய் விட்டு சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி அத்துடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அத்துடன் அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    பின் அத்துடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கஷ்மீரி மிளகாய்தூள், மல்லிதூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நன்கு வதங்கிய பின் தயிர், உப்பு சேர்த்து கிளறி அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    பிறகு அத்துடன் ரோஸ்ட் செய்த பன்னீரை சேர்த்து மசாலா உடன் பிரட்டவும். கொஞ்சமாக கரம்மசாலா சேர்த்து 5நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான பன்னீர் மசாலா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes