பிலிப்பைன்ஸ் லூம்பியா (Mutton) (Filipino Lumpia recipe in tamil)

#deepfry
ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிகம் பேரால் விரும்பப்படும் விழாக்கால திண்பண்டம் லூம்பியா.இதன் செய்முறையை இங்கு காண்போம்.
பிலிப்பைன்ஸ் லூம்பியா (Mutton) (Filipino Lumpia recipe in tamil)
#deepfry
ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிகம் பேரால் விரும்பப்படும் விழாக்கால திண்பண்டம் லூம்பியா.இதன் செய்முறையை இங்கு காண்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவினை உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
- 2
மாவினை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சிறிய வட்ட வடிவ சப்பாத்திப் போல் தேய்க்கவும்.
- 3
தேய்த சப்பாத்தி மீது எண்ணெய் தடவி மீண்டும் மாவினை தூவி மற்றொரு சப்பாத்தி மாவை வைக்கவும்... இவ்வாறு பல அடுக்கு செய்யவும்.
- 4
இந்த அடுக்கினை அகலமாக தேய்த்து வைக்கவும்.
- 5
இதனை தோசைக்கல்லில் ஒரு புறம் 30 வினாடியும் மறுபுறம் 30 வினாடியும் வைத்து சுட்டு எடுக்கவும்.
- 6
பின்னர் தேவையான அளவில் சதுரத் துண்டுகளாக அல்லது செவ்வக துண்டுகளாக வெட்டி தனித்தனியாக எடுக்கவும்.....
- 7
ஒரு ஸ்பூன் மைதா மாவில் தண்ணீர் கலந்து பசை தயாரித்துக் கொள்ளவும்... அல்லது முட்டையையும் பயன்படுத்தலாம்....
- 8
லூம்பியாவின் உள்ளே வைக்க பூரணம் தயாரிக்க பூண்டு,வெங்காயம்,காரட் போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 9
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பூண்டு வெங்காயத்தை நன்கு வதக்கவும்
- 10
பின்னர் கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்
- 11
வதங்கிய பின்பு கொத்துக்கறி மட்டனை சேர்க்கவும்.. மட்டன் -க்கு பதிலாக சிக்கன், இறால், மீன் போன்ற இறைச்சி-களும் சேர்க்கலாம். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 12
மிளகுத்தூள் நறுக்கிய மல்லி இலை சேர்த்து வதக்கவும்.நம் நாட்டில் காரமான உணவுகள் சாப்பிட்டு பழகியதால் நான் இதனுடன் மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கிறேன்..... இதனை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட்டு வதக்கி இறக்கவும்.,
- 13
வதக்கிய பூரணத்தை நாம் தேய்த்து வைத்திருக்கின்ற சப்பாத்தியின் ஒரு மூலையில் வைத்து சுற்றி இரண்டு புறமும் மடித்து மீண்டும் சுற்றி
- 14
மைதா மா பசை கொண்டு ஒட்டவும்.... இதைப் போன்றே அனைத்தையும் சுற்றி ஒட்டி வைக்கவும்....
- 15
இதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..... இதைப்போன்றே அனைத்தையும் பொரித்து எடுத்து காகிதத்தில் வைத்து பின்பு தட்டில் பரிமாறவும்....
- 16
இதனை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்...... இது குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவரும் தின்பண்டம் ஆக இருக்கும்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஜப்பான் மட்டன் காய்கறி குழம்பு (Japanese lamb & veg curry recipe in tamil)
#Onepotஆரோக்கிய சமையலுக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டில் , நமது அஞ்சரைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு இது.... இதன் விரிவான செய்முறையை இந்த பதிப்பில் காண்போம்.... karunamiracle meracil -
-
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
-
-
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
-
ரசம்
ஆரோக்கியமான உணவு முறையி முதலிடம் பிடிக்கும் ரசத்தை சற்று சுவையாக இங்கு காண்போம்.#book karunamiracle meracil
More Recipes
கமெண்ட்