மக்கா சோள மசால் வடை (Makka sola masal vadai recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#deepfry.. சோளம் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடியது, குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.. அதைவைத்து மசால்வடை செய்து பார்த்தேன், மிக சுவையாக இருந்தது...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் வேகவைத்து உரித்த சோள கதிர்கள்
  2. 1/2 கப் கடலைமாவு
  3. 1/4 கப் அரிசிமாவு
  4. 1/4 கப் கேரட் துருவல்
  5. 1/2 கப் வெங்காயம் பொடியாக நறுக்கின
  6. 2பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி
  7. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. உப்பு, எண்ணெய்
  9. கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை ஒரு கைப்பிடி

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் மக்கா சோளத்தை இட்லி தட்டில் வேகவைத்து உரித்து எடுத்து வைத்துக்கவும். அதை மிக்ஸியில் தண்ணி விடாமல் கரகரப்பாக அரைத்துக்கவும்

  2. 2

    அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கின வெங்காயம், காரட் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு, கடலை மாவு, அரிசிமாவு எல்லாம் சேர்த்து தண்ணி விடாமல் நன்றாக பிசையவும்.

  3. 3

    ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மாவை கையில் வைத்து வடை போல் தட்டி எண்ணையில் போட்டு இரண்டுபக்கவும் திருப்பி விட்டு நன்கு பொரித்தெடுக்கவும். மிக சுவையாக இருக்கும் இந்த மக்கா சோள வடை.. உள்ளே மிருதுவாகவும் வெளியில் நல்ல மொறு மொறுன்னும் இருக்கும்.. உடம்புக்கு ஆரோக்கியமான இந்த வடையை செய்து பார்த்து ருசிக்கவும்...

  4. 4

    சுவையான மக்கா சோள வடை தயார் தேங்காய் சட்னி யுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes