எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250கிராம் உருளைக்கிழங்கு
  2. 1வெங்காயம்
  3. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  5. தேவையானஅளவு உப்பு
  6. சிறிதளவுகொத்தமல்லி
  7. பொரிப்பதற்கு எண்ணெய்
  8. 1ஸ்பூன் கார்ன் ப்ளார்
  9. 1ஸ்பூன் மைதா
  10. 1கப் வறுத்த சேமியா

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்

  2. 2

    மசித்த கிழங்கில் சிறிது எடுத்து தனியாக வைக்கவும்

  3. 3

    கிழங்குடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.. தண்ணீர் சேர்க்க கூடாது

  4. 4

    மைதா, கார்ன் ப்ளார் மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்..

  5. 5

    கிழங்கு கலவையில் இருந்து ஒரு உருண்டை அளவு எடுத்து வடை போல் லேசாக அமுக்கி நடுவில் ஒரு குழி செய்து கொள்ளவும்

  6. 6

    அதை கரைத்து வைத்துள்ள மைதா கலவையில் முக்கி எடுக்கவும்

  7. 7

    ஒரு தட்டில் சேமியாவை பொடியாக நொருக்கி பரப்பி வைக்கவும்.. அதில் மைதாவில் முக்கிய கிழங்கை போட்டு பிரட்டி எடுக்கவும்

  8. 8

    கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் பொரித்தெடுக்கவும்

  9. 9

    முதலில் எடுத்து வைத்த உருளைக்கிழங்கில் சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிய அளவிலான உருண்டையாக உருட்டவும்.. அதை பார்த்தால் முட்டை மாதிரி இருக்கும்

  10. 10

    பொரித்தெடுத்த கிழங்கின் மேலே சிறிய உருண்டையை வைத்து அலங்கரிக்கவும்

  11. 11

    இப்போது அருமையான உருளைக்கிழங்கு பறவைக்கூடு தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes