செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4#week4#gravy
சப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  1. 1பாக்கெட் மஷ்ரூம்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  7. 1டீ ஸ்பூன் தனியாத்தூள்
  8. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 3/4 டீஸ்பூன் கரம் மசாலா
  10. உப்பு தேவையான அளவு
  11. தாளிக்க
  12. இரண்டு கொத்து கறிவேப்பிலை
  13. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  14. 6டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  15. தாளிக்க
  16. 2பட்டை
  17. 1பிரியாணி இலை
  18. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை இலை ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சேர்க்கவும்..

  2. 2

    இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கி பிறகு தூள் வகைகளை சேர்க்கவும்.

  3. 3

    இப்போது தக்காளியை சேர்க்கவும் நன்றாக வதக்கி சுருள வந்ததும் காளானை சேர்க்கவும்.

  4. 4

    பிறகு நன்றாக கிளறி உப்பு சேர்த்து 1/2 அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிடியம் தீயில் வத்த விடவும். வேறொரு கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கருவேப்பிலை மிளகு தூள் தாளித்து சேர்க்கவும்.

  5. 5

    இரண்டு நிமிடம் கிளறி கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். நம்ம மஷ்ரூம் கிரேவி ரெடி. 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes