தினை பாயாசம்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கப் (70 கிராம்)தினை
  2. 1 லிட்டர் பால்
  3. 100 கிராம் அச்சு வெல்லம் பொடித்தது
  4. 12 ஏலக்காய்
  5. 1 ஸ்பூன் சர்க்கரை
  6. 2 டேபிள்ஸ்பூன் பாதாம் நறுக்கியது
  7. 2 டேபிள்ஸ்பூன் முந்திரி உடைத்தது
  8. 15 திராட்சை
  9. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  10. 1 சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    தினையை அலசி வடிகட்டி தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைக்கவும், பாதாமை ஊறவிட்டு தோல் உரித்து உலர்த்தி பின் நறுக்கி கொள்ளவும் வெல்லத்தை பொடித்து கொள்ளவும் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்

  2. 2

    அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் ஊறவைத்து வடிகட்டிய தினையை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து 20 நிமிடங்கள் வரை வேகவிடவும்

  3. 3

    இதற்கிடையில் பக்கத்து அடுப்பில் தனியாக ஒரு பேன் வைத்து ஏலக்காய் ஐ வெறும் பேனில் வறுத்து பின் மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து பொடித்து கொள்ளவும்

  4. 4

    பின் மீண்டும் அதே பேனில் நெய் விட்டு சூடானதும் முந்திரி பாதாம் திராட்சை ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

  5. 5

    பாலில் தினை நன்கு வெந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும் நான் அச்சு வெல்லம் பயன்படுத்தி உள்ளேன் நீங்க நார்மல் வெல்லத்தை பயன்படுத்தினால் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இளம் பாகு எடுத்து வடிகட்டி ஊற்றவும்

  6. 6

    பின் வெல்லம் நன்கு கரைந்ததும் ஏலத்தூள் உப்பு வறுத்து வைத்துள்ள முந்திரி பாதாம் திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    எல்லாம் சேர்ந்து ஒரு ஐந்து நிமிடம் வரை கொதித்ததும் இறக்கி நன்கு கிளறி விடவும்

  8. 8

    சுவையான தினை பாயாசம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes